Latest News

May 08, 2011

ஒபாமாவை பிரீமியர் ஷோவிற்கு அழைத்த மல்லிகா ஷெராவத்
by admin - 0















பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி மல்லிகா ஷெராவத், ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜானுடன் "மித்" படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார்.
இப்போது முழுநேர ஹாலிவுட் நடிகையாக மாறி வரும் அவர், சமீபத்திய சிலகாலமாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார்.
அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினாராம். பல நாட்களுக்கு பிறகு இந்தியா வந்து இறங்கியிருக்கும் மல்லிகா, ஒபாமாவுடனான நெகிழ்ச்சியான சந்திப்பு கூறியதாவது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த போது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
என்னுடைய படங்கள் பற்றி நிறைய கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு என்னுடைய லவ் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அழைத்தேன், அவரும் வருவதாக கூறினார்.



என்னுடைய வாழ்க்கையும், அதிபர் ஒபாமாவின் வாழ்க்கையை போன்றது தான். இந்தியாவிலேயே அதிபர் ஒபாமாவை சந்தித்த ஒரே நடிகை நான் தான், இது எனக்கு கிடைத்த பெருமை.
பலர் என்னிடம் நான் சுயசரிதை எழுதப்போவதாக கேட்கின்றனர். சுயசரிதை எழுதும் அளவுக்கு இன்னும் நான் வளரச்சி அடையவில்லை. சினிமாவில் இன்னும் நிறைய சாதித்த பின்னர் நிச்சயம் சுயசரிதை எழுதுவேன்.
« PREV
NEXT »

No comments