Latest News

May 03, 2011

கொல்லப்பட்ட பின்லேடனின் புகைப்படம் போலியானது!இன்னும் புகைப்படம் அமெரிக்கவால் வெளியிடப்படவில்லை
by admin - 0

அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் இறந்த உடல் என்று கூறி இணையத்தளங்களில் வெளியான படம் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

பின்லேடன் போலவே தோற்றம் கொண்ட கொல்லப்பட்ட ஒரு நபரின் படத்தை போட்டோஷாப் மூலம் திரித்து, லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட படம் போல சித்தரித்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.


பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியதுமே அவரது கொல்லப்பட்ட உடலைக் காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் எங்குமே புகைப்படம் வெளியாகவில்லை. அமெரிக்காவும் புகைப்படத்தை வெளியிடவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் வெளியிடவில்லை.



இந்த நிலையில் பாகிஸ்தான் டிவிக்களில்தான் முதல் முதலாக பின்லேடனின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் பின்லேடன் போலத் தோற்றமளிக்கும் ஒரு முகம் இடம் பெற்றிருந்தது. மிகவும் கோரமாக சிதைக்கப்பட்ட நிலையில் அந்த முகம் காணப்பட்டது.

இதையடுத்து அனைவரும் இதுதான் கொல்லப்பட்ட பின்லேடனின் புகைப்படம் என்று கூறி பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் அது போலியான புகைப்படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பின்லேடன் முகத்திற்கும், இந்த முகத்திற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் தெரிகின்றன. தாடியில் நரை குறைவாக உள்ளது. நிஜத்தில் பின்லேடனுக்கு தாடியில் நரை நிறைய இருக்கும். இதுபோல சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தன. இதையடுத்துஇந்த புகைப்படம் போலியானது என்பது உறுதியாகியுள்ளது.

போலியானதாக இருந்தாலும் இந்த நிமிடம் வரை இந்த புகைப்படம்தான் உலகெங்கும் வலைத்தளங்களில் வளைய வந்து கொண்டுள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் எதையும் இதுவரை அமெரிக்க அரசோ, ராணுவமோ, அமெரிக்க இணையதளங்களோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments