Latest News

May 01, 2011

வடிவேலுவை கண்டித்து ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்
by admin - 0


திருச்சியில் நடிகர் வடிவேலுவை கண்டித்து ரஜினி ரசிகர்கள் ஓட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் எந்திரன் படத்துக்கு பிறகு ராணா படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இந்தநிலையில் ராணா படத்தில் முதலில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் பிறகு அவருக்கு பதில் நடிகர் கஞ்சாகருப்பு நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று வடிவேலுவிடம் கேட்டபோது ராணா படமாவது கானா படமாவது எதைப்பற்றியும் கவலையில்லை என கூறினார்.

இது ரஜினி ரசிகர்களை ஆத்திரப்படுத்தி உள்ளது. வடிவேலுவுக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சியில் வடிவேலுவை கண்டித்து போஸ்டர்கள் ஓட்டி உள்ளனர்.

அதில், வண்மையாக கண்டிக்கிறோம் திரையுலகில் 3 தலைமுறைகளை வென்ற முடிசூடா மன்னன் எங்கள் அன்பு தலைவர் சூப்பர் ஸ்டாரின் ராணா படத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ‘‘காமொடி கைப்புள்ளையை’’ வன்மையாக கண்டிக்கிறோம். இவண் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் என கூறப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் உள்பட பல பகுதிகளில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு உள்ளது.

« PREV
NEXT »

No comments