
கிராமப்புற சந்தையில் பஜாஜ் பாக்சர் நிலையான இடத்தை பிடித்திருந்தது. ஆனால், அந்த பைக்கின் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோ திடீரென நிறுத்தியது. இந்த நிலையில், மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளிக்கும் விதமாக, பாக்சரை மறு வடிவமைப்பு செய்து, இந்த ஆண்டின் இறுதிவாக்கில் சந்தையில் களமிறக்குகிறது பஜாஜ்.
ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள பாக்சர் பைக்கில் 150 சிசி எஞ்சினை பொருத்தப்பட உள்ளது. இந்த பைக்கை பாரத் பைக் என்ற பெயரில் அறிமுகம் செய்யவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளது. மார்க்கெட்டில் 150 சிசி பைக்குகளுக்கு உள்ள வரவேற்பு பஜாஜ் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
பல்சர் மற்றும் டிஸ்கவர் பைக்குகள் நகர்ப்புற சந்தையில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருப்பதால், குறைந்த விலையில் பாக்சர் பைக்கின் 150 சிசி மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம், கிராமப்புற சந்தையிலும் குறிப்பிட்ட இடத்தை பெற முடியும் என்பது பஜாஜின் கணக்கு.
மேலும், இந்த பைக்கை 40,000 விலை அட்டவணையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள பஜாஜ், இதன்மூலம், மற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் கிராமப்புற சந்தை பங்களிப்பை உடைக்க முடியும் எனவும் கருதுகிறது. புதிய பாக்சர் பைக் அறிமுகத்தை பஜாஜ் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜும் உறுதி செய்துள்ளார்.
பிடித்திருக்கா like பன்னுங்கோ
No comments
Post a Comment