Latest News

April 19, 2011

தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பஸ் (படங்கள் இணைப்பு
by admin - 0

பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பஸ் தனது பயணத்தை தொடங்கியது. பிரேசிலில் பிரபல நிறுவனம் பிஆர்டி என்ற உலகின் நீளமான பஸ் ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீட்டர் நீளமுள்ள அந்த பஸ்சில் 250 பேர் பயணிக்கலாம். இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பதுதான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பஸ்சின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பஸ்களை இந்நிறுவனம் இயக்க உள்ளது. மேலும், மணிக்கு 28 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பஸ்கள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments