Black -பெல்ட்' பெண் என்றால்...
என் உறவினரின் பெண், படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டி. அதோடு, கல்லூரிக்கு பைக்கில் தான் செல்வாள். கல்லூரியில் நடைபெற்ற தற்காப்புக் கலை பயிற்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக கற்றுக் கொண்டாள். அதைத் தொடர்ந்து, கராத்தே கலையை விடாமுயற்சியோடு கற்று, ப்ளாக் - பெல்ட் பட்டம் பெற்று விட்டாள்.
கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று முடித்ததும், அவளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்த போது, என் உறவினர் களில் சிலர், "அவளா... சரியான பொம்பள ரவுடியாச்சே... திமிர் பிடிச்சவளாச்சே...' என்று, அளவுக்கதிகமாக பொருமினர்; இதனால், சில வரன்கள் தட்டி போயின.
சமீபத்தில், ஒரு கண்ணியமான ஆண்மகனை கைப்பிடித்து, கம்பீரமாக இருவரும் தெருவில் நடந்து வரும் போது கூட, "மாப்பிள்ளை பாவம், வீட்ல என்ன அடி வாங்குறானோ...' என்றெல்லாம் நாகூசாமல் பேசுகின்றனர். இயல்பாகவே அந்த பெண், இனிமை யாக பழகும் குணம் கொண்டவள். நம் சமுதாயத் தில் மற்ற பெண்களால் சாதிக்க முடியாததை, அவள் செய்து விட்டாள் என்ற பொறாமையின் உச்சமே, இதுபோன்ற, "பொல்லாங்கு பேசுதல்' என்பதை புரிந்து கொண்டேன்.
பெண்கள், தற்காப்பு நடவடிக்கைகளில் பின் தங்கியிருப்பதே சமூக விரோதிகளுக்கும், பொறுக்கிகளுக்கும் வரவேற்பு அளிப்பது போல. "தற்காப்புக்கலை பெண்களுக்கு தன்னம்பிக்கையை தரும்...' என்ற உண்மையை, எப்போது நம் பெண்கள் புரிந்து கொள்வரோ!

No comments
Post a Comment