Latest News

April 05, 2011

ஆட்டுக்குட்டிகளில் ரத்தக்கழிச்சல் நோய்
by admin - 0




நோயின் அறிகுறிகள்: வயிற்று வலியின் காரணமாக ஆட்டுக்குட்டிகள் அடிக்கடி முனங்கிக் கொண்டு முதுகை வளைத்து சாணம் போட முயற்சி செய்தல்
* குட்டிகளின் வாலைச் சுற்றி சிறிய பசை போன்ற சாணம் ஒட்டிக்கொண்டு காணப்படுதல்
* சாணம் நிறைய சளியுடன் கூடிய ரத்தமாக காணப்படுதல்
* தொடர்ந்து கழிச்சல் இருப்பதால் விரைவிலேயே நீர்ச்சத்து உடலில் இருந்து வெளியேறி சோர்வாக காணப்படுதல்
* ரத்த சோகையால் கண் மற்றும் வாய்ப்பகுதியில் உள்ள சவ்வு வெளிறிப் போய் காணப்படுதல்
* குட்டிகள் பசியின்மையால் சிறிது சிறிதாக பால் குடிப்பதை நிறுத்திவிடுதல்
* குட்டிகள் மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுதல்
* இளம் குட்டிகளின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருத்தல்
* அழுக்கு நிறைந்த தோற்றத்துடன் காணப்படுதல்
மருத்துவ முறை: கழிச்சல் ஏற்பட்ட உடனேயே நோய் முற்றிய நிலையில் இருக்கும். எனவே உடனடி சிகிச்சை அவசியம் மேற்கொள்ள வேண்டும். கழிச்சல் கண்ட குட்டிகளை உடனே ஆரோக்கியமான குட்டிகளில் இருந்து பிரித்து தனியே அடைக்க வேண்டும். கழிச்சல் கண்ட குட்டிகளின் சாணத்தை எடுத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் சாணத்தில் ரத்தக்கழிச்சலை ஏற்படுத்தக்கூடிய முட்டைகள் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தக் கழிச்சலை ஏற்படுத்தக்கூடிய முட்டைகள் கண்டு அறியப்பட்டால் அந்த குட்டிகளுக்கு ஆம்புரோலியம் மற்றும் சல்பாடிமிடின் போன்ற மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியான அளவு கொடுக்க வேண்டும். வயிற்றுப் போக்கால் ஏற்படும் உடல் நீர் இழப்பை ஈடுசெய்ய 0.9 சதவீதம் உப்புக்கரைசல் அல்லது 5 சதவீத குளூக்கோஸ் கரைசலை குட்டிகளுக்கு ஊசி மூலம் கொடுக்க வேண்டும். ரத்தசோகையை நீக்க ரத்த ஊக்கிகளான உயிர்ச்சத்து "பி' மற்றும் இரும்பு, தாமிரம் அடங்கிய தாதுக்கலவையை கொடுக்க வேண்டும்.
ரத்தக்கழிச்சல் வராமல் காக்க வேண்டிய பராமரிப்பு முறைகள்: * குட்டிகளுக்கான கொட்டகை நீளவாக்கில் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும்.
* கொட்டகையின் தரைப்பகுதி சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.
* குட்டிகள் பிறக்கும் 10 நாட்களுக்கு முன்னரே குட்டிகளை அடைக்கும் கொட்டகையின் தரைப்பகுதியை 4 அங்குல ஆழத்திற்கு சுரண்டி பழைய மண்ணை எடுத்துவிட்டு புதிய மண்ணாக சரளை அல்லது பெருமணலை பரப்பி சுண்ணாம்பு தூள் கொண்டு மண்ணை கிளறிவிட வேண்டும்.
* கொட்டகையின் சுவர்களை சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடிக்க வேண்டும்.
* கொட்டகையின் உள்ளே இருக்கும் தண்ணீர் தொட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம செய்து வெள்ளை அடிக்க வேண்டும்.
* அதிக அளவு குட்டிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைக்கக்கூடாது.
* தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளை சிறிது உயரத்தில் தனித்தனியாக நல்ல இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
* குட்டிகளுக்கு வழங்கும் தீவனம் அதிக ஈரப்பதத்துடன் இல்லாமல் சிறிது உலர்ந்ததாக இருக்க வேண்டும்.
* குட்டி ஈன்றவுடன் தாயின் மடியை நன்கு கழுவி பின் குட்டிகளை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும்.
* குட்டிகளை தாய் ஆட்டுடன் முதல் 3 நாட்களுக்கு மட்டுமே வைக்க வேண்டும். பிறகு காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பால் குடிக்க அனுமதித்துவிட்டு குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்து தனியே அடைக்க வேண்டும்

Canus Goat's Milk Rich Moisturizing Pure Vegetable Oil Soap, 3-Count Boxes (Pack of 4) 
« PREV
NEXT »

No comments