Latest News

November 29, 2020

மாவீரர் நாள் 2020-உலகத் தமிழர் இளையோர் ஒன்றியம்
by Editor - 0

மாவீரர் நாள் 2020
எமது அன்பார்ந்த தமிழ் மக்களே!
இன்று மாவீரர் நாள். தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம்செய்த மகத்தான மாபெரும் வீரர்களின்  நினைவுநாள். உடல், உயிர், உடைமைகள் அனைத்தையும் உகந்தளித்த உத்தமர்களை பூசிக்கும் புனிதநாள்.  எமது இனத்தின் நிரந்தர விடுதலைக்காக நீண்ட நெருப்பாறுகளை  நீந்திக்கடந்து எமது மக்கள் நிம்மதியாக, சுபிட்சமாக வாழவேண்டும் என்பதற்காக செந்தணலில் வெந்துகளமாடிய  அக்கினிக்குஞ்சுகளின் நினைவு நாள். தமிழினத்தின் விடுதலைக்காக போராடி வீரச்சாவடைவதையே இலக்காகக்கொண்டு உயிரைக்கொடையாக்கி இலக்கை அழித்து தடைகளை தகர்த்தெறிந்து அக்கினியில் சங்கமித்த தடைநீக்கிகளை எம் இதயக்கோவில்களில் நிலை நிறுத்தும் வீரப்புதல்வர்களின் எழிச்சி நாள். கடாரம்வென்ற சோழப்பேரரசின் வழித்தோன்றலில் பண்டாரவன்னியன் போரிட்டவாளுக்கு புத்துயிர்கொடுத்த எம் சூரியப்புதல்வனும் வரலாற்றோடு சங்கமித்த சரித்திரத்தின் புனிதநாளே இம் மாவீரர்நாள். எம் மாவீரச்செல்வங்களுக்கு மலர்தூவி பூசிக்கும் புனிதமான எழிச்சிநாள். இன்நாளில் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களைத்தியாகம்செய்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூறுவதில் நாம் பெருமிதம்கொள்கின்றோம்.
எமது அன்பார்ந்த தமிழ் மக்களே!  இயற்க்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்று வரலாற்றுத்தடம்பதித்த தமிழின தேசியத்தலைவரின் தமிழர் வரலாற்றை இம் மாவீரர்நாள் நினைவோடு புரட்டிப்பார்கவேண்டி உள்ளது. ஏனெனில் அது ஒரு வரலாற்றுத்தொடர். அந்தவகையில் ஆசியக்கண்டத்தில் சோழப்பேரரசின் ஆட்சிக்காலமும் மாமன்னன் பண்டாரவன்னியனின் வீழ்ச்சிக்குப்பின்னர் சோழமன்னன் நிறுத்தியபுலிக்கொடிக்கு புத்துயிர்கொடுத்து, பண்டாரவன்னியன் ஏந்திய வாளெடுத்து கறைதுடைத்து தமிழின விடுதலைக்காக 37 வருட காலம் சிங்கள பேரினவாத அரசுக்கெதிராக போர்தொடுத்து மீண்டும் தமிழர் வரலாறு 2009 மே மாதம் 17 ஆம் திகதியுடன் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் தமிழீழ தனியரசின் கட்டுமானங்கள், முப்படைகளையும் வழிநடத்திய தேச புதல்வன் சூரியதேவன் சரித்திரமாகிய தமிழர் வரலாற்றில் நாம் கண்ட இறுதி வரலாறு. இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழர் வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் நடந்தேறிய கறுப்பு நாளாகவே தமிழர் வரலாறு பதிவு செய்திருக்கின்றது. அடுத்து தாய்த்தமிழ் அன்னை பிரசவிக்கும் அக்கினிக்குஞ்சொன்றின் வருகைக்கு யார் மீள் எழுவார்? என்றுமே நித்தமும் ஏங்குதே தமிழர்தரப்பு. இயற்கையின் நியதி புதிய வரலாறு இடைவெளியில்லாமல் நிரப்பட்டும் இம்மாவீரர் நினைவில் அவை நடக்கட்டும். புனிதமான மாவீரர் தியாகங்களை பூசிக்கும் இத்திருநாளில் மாவீரர்களின் கனவில் அவையாவும் பலிக்கட்டும்.

பேரன்பு கொண்டு நாம் நேசிக்கும் எம் தமிழ்ச்சொந்தங்களே! பத்து கோடி தமிழர்களாகிய நாம், படுத்துறங்க ஆறடி நிலம் கூட எமக்கில்லை. ஆண்ட பரம்பரை மீண்டும் எம்மை நாம் ஆள நினைப்பதில் என்ன குறை? கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. ஐக்கியநாடுகள் சபை அறியாதா? அமெரிக்காவிற்கு புரியாதா? ஐரோப்பிய நாடுகளுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. அகழ்வாராய்ச்சியின் ஆய்வுகளின் படி உலகின் மூத்த குடி தமிழினமே என்று அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள் சகல நாடுகளிலும் ஆவணப்படுத்தப்பட்டவை யாவரும் அறிவார். ஆனால் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு வழங்குவதில் மட்டும் உலகத்தின் பார்வை மர்மமானதாகவே அமைகின்றது. அந்தவகையில் ஐந்து இலட்சம் மக்கள் தொகையைக்கொண்ட மாலைதீவிற்கும், ஐம்பத்து ஏழாயிரம் மக்களைக்கொண்ட செயின்கிற்ஷ் என்ற நாட்டுக்கும், ஏன் ஐம்பத்துமூவாயிரம் மக்கள் தொகையைக்கொண்ட நுணாஷ்க்கோ நாட்டுக்கும், இதற்கும் மேலாக நானூற்றுஐம்பத்தொரு குடியுரிமையாளர்களைக்கொண்ட கிறிஸ்தவ நாடான வத்திக்கான் நாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அந்தந்த நாடுகளுக்கான அங்கீகாரமும் அதே நாடுகளுக்குரிய கொடிகளையும்  ஐ.நா சபையில் பறக்கவிடுவதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டிருக்கும் போது ஒன்பது கோடியே அறுபத்தைந்து இலட்சம் மக்கள் தொகையைக்கொண்ட தமிழினத்திற்கு உலகப்பந்தில் ஒரு சிறு நாட்டுக்குரிய அங்கீகாரமோ அல்லது தமிழ் இனத்தின் தேசியக் கொடிக்குரிய அங்கீகாரம் வழங்கப்படாதது ஏன்? சர்வதேசமே! கண்விழித்துப்பார் நீதிதேவதையே கட்டப்பட்ட உன் கண்களை அவிழ்த்துப்பார். நீதி  எங்கே மறுக்கப்பட்டதென்பதை புரட்டிப்படி . வரலாறும் அதனால் உருப்பெறும் சரித்திரமும் செத்துப்போவதற்கா? உலக நியதியும், சத்தியமும், தர்மமும் நடைமுறையும் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வல்லவன் வகுத்ததே சட்டம் என்றால் நீதியும் நேர்மையும் ஒழுக்கநெறியும் பிறகெதற்கு? சோழப்பேரரசின் ஆட்சியும் பண்டாரவன்னியனின் வீழ்ச்சியும் பிரபாகரனின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் சொல்வதென்ன? தமிழீழம் என்ற சிறு நாட்டுக்குரிய அங்கீகாரத்தை வளங்கி தமிழீழ தனியரசுக்கான அங்கீகாரமும், தேசியக் கொடிக்கான அங்கிகாரமும் ஐ.நா சபையால் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் விருப்பம். மாறாக பிரபாகரன் அவர்களுக்கு பின் தமிழ் இனத்தின் இளையசமுதாயம் மீழ் எழுகை கொண்டு புதிய போராட்டப்பாதையை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் அத்திவாரமிடாதென  எதிர்பார்க்கின்றோம். அந்த வகையிலே ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தோடு தமிழீழத்திற்கான சர்வதேச வாக்கெடுப்புக்களை நடத்தி ஒரு சனநாயக அரசியல் தீர்வு மூலம் சர்வதேச அனுசரணையோடு தமிழருக்கான நிரந்தரத்தீர்வை பெற்றுத்தரவேண்டுமென உலகத்தமிழர்கள் சார்பில் அன்புரிமையுடன் இம் மாவீரர் நாளில் வேண்டிநிற்கின்றோம்.

தமிழீழ தனியரசு அமைய சர்வதேச சமூகத்திற்கு பிரித்தானியரசே முதலில் வேண்டுகோள் விடுக்கவேண்டுமென  இம் மாவீரர்களின் நினைவுநாளில் அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். ஏனெனில் இலங்கையில் போர்த்துக்கேசியர், ஒல்லாந்தர் ஆட்சியைத்தொடர்ந்து பிரித்தானிய அரசே இலங்கையை  ஆட்சி செய்தது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் நிர்வாக நடைமுறைகளை இலகுவாக்கும்நோக்கோடு தமிழர், சிங்களர் என்ற இரு ஆட்சியாளர்களையும் ஒன்றுசேர்த்து ஆட்சிசெய்த வரலாற்றுத்தவறை பிரித்தானிய அரசே மேற்கொண்டது. அதுமட்டுமன்றி 1948ஆம் ஆண்டில் பிரித்தானியா  இலங்கையைவிட்டு வெளியேறியபோது தாம்  ஆட்சி செய்த  நிர்வாக அலகு முறையில் எவ்வித மாற்றமும் செய்யாது  விட்டதுமன்றி  சிங்களத்தலைவர்களிடம் ஆட்சியை அப்படியே கொடுத்துவிட்டு சென்றமையானது இன்று வரை தமிழர்தரப்பு தமது உரிமைக்காக  போராடவேண்டிய நிர்பந்தத்திற்கு பிரித்தானியரசே  பொறுப்புக்கூறவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. ஆகவே 1948இல் பிரித்தானியரசு மேற்கொண்டதவறுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டுமேயானால் தமிழர் தரப்பிற்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தின் முன்தோன்றி  தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தனியரசை நிறுவுவதற்காக  சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு  ஐ.நா சபையில் அங்கிகாரத்தை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறு பிரித்தானிய அரசை உலகத்தமிழர்கள் சார்பில் அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். இப்புனித மாவீர்களை நினைவுகூறும் இன் நன்நாளில்  தமிழினத்திற்கான  நிரந்தரத்தீர்வு தொடர்பாக பிரித்தானிய அரசிடம் நீதி கோருவதை தமிழர் தரப்பு மிகவும் எதிர்பார்க்கின்றது. அத்தோடு விடுதலைப்புலிகள்  மீதான தடையை நீக்குவதற்காக அறிவித்திருந்தமையும்,யாவரும் அறிந்ததே . இன் நிலையில் இலங்கை அரசின் வேண்டு கோளுக்கிணங்க வெளியுறவக்கொள்கைக்குட்பட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதாக அறிவித்திருந்தமையும் அதன் பின்னர்  2009 ம் ஆண்டு மேமாதம் 18  ம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் தாம் அழித்து விட்டோம் என்று  ஆதாரங்களுடன் சிறிலாங்க அரசு உத்தகயோகபூர்வமாக  அறிவித்திருந்தமை மறுப்பதற்கில்லை. இதற்குப்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் நீக்கத்தவறியமை சர்வதேச பொதுச்சட்ட விதிகலுக்கு மாறுபட்டதோடு வெளியுறவுக் கொள்கைக்கு முரண்பட்டதாக எம்மால் பார்க்கப்படுகிறதென்ற யதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் அதேநேரம்  சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள்  மீதான தடையை நீக்கி தமிழ்  தரப்பு சர்வதேச ரீதியாக சனநாயக வழியில் தமிழீழத்திற்க்கான சர்வதேச வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் ஜ.நாவின் அங்கீகாரம் வேண்டி போராடுவதற்கும்   விடுதலைப்புலிகள் மீதான தடை தமிழ் தரப்பிற்கும் தடையாகவே உள்ளதென்பதை யும்  இம் மாவீரர் நாள் நினைவு நாளில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்தோடு சென்றமாதம் பிரித்தானிய நீதிமன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கொன்றில் விடுதலைப்புலிகளை தடைசெய்யமுடியாதென்றும், அதுபிரித்தானியரசின்  சட்ட நடைமுறைக்குட்படவில்லை என்று கட்டளையிட்டநீதிபதிக்கு  இச்சந்தர்ப்பத்தில் உலகத்தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவிப்பதில் பெரும்மகிழ்வடைகின்றோம். அதேநேரம் பிரித்தானியாரசு தனது இறையாண்மையைப் பயன்படுத்தி தமிழீழ    விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டுமெனவும், மிகவும்அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச தடையென்பது இலங்கையரசின் வெளியுறவுக்கொள்கைக்கு உட்பட்டதாகவே அமைகின்றது. ஏனெனில் கடந்த வருடம் நெதர்லாந்துநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்படி  தமிழீழ விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் எவ்வகையான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லையெனவும் அத்தோடு விடுதலைப்புலிகள்  மீதான தடையை நீக்குவதாக அறிவித்திருந்தமையும் யாவரும் அறிந்ததே.

ஆகவே சர்வதேச சமூகம் உலக தமிழரது சனநாயக வழியிலான போராட்டத்திற்கு மதிப்பளித்து  தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வரவேண்டுமென இப்புனித மாவீரர்நாளில் வேண்டுகோள்விடுக்கின்றோம். எமது பேரன்பு கொண்ட மக்களே! உலக அரசியல் வரலாற்றில் இன்று பல மாற்றங்களும்,நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான அங்கீகாரமோ அல்லது தமிழரது தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வோ இன்றுவரை எமக்கு கிடைக்கப்பெறவில்லை. மாறாக போர் முடிவுற்றதன் பின்னர் சிங்களப்பேரினவாத அரசபடைகளால் என்றுமில்லாதவாறு இனவாதம் தலைதூக்கியுள்ளதென்பதை இம் மாவீரர்களின் நினைவுநாள் நிகழ்வு மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

அதாவது பூர்வீக காலமாக நாம்வாழ்ந்துவந்த தாயகபூமிகள்யாவும் பரவலாக சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டப்பட்டு குடியேற்றப்படுகின்றன. குறிப்பாக தமிழர்களின்  வளமிக்க கரையோரப்பகுதிகள்யாவும் சிங்கள குடியேற்றங்கள்  ஏற்கனவே குடியமர்த்தப்பட்டுள்ளன. அவ்வாறே அண்மையில் காணி பகிர்ந்தளிப்பு  புதியசட்ட நடைமுறைகளைப்பயன்படுத்தி  தெற்குச்சிங்களவர்கள் வடகிழக்கு தமிழர்தாயக பூமிக்குள் திட்டமிடப்பட்டு காணி பகிர்ந்தளிப்பு நடைமுறைச்சட்டத்தின்கீழ் குடியமர்த்தப்படுகின்றார்கள். இவ்வாறான நடைமுறைகளால் தமிழர்களின் தாயகபூமியெங்கும் சிங்கள பெளத்த பிரதேசங்களாக மாற்றப்படும் துயரத்தின் வேதனையை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? அதுமட்டுமன்றி இன்றும் தமிழர்கள் பெளத்த பிக்குகளால் சிறைப்பிடிக்கப்பட்டும், அடைக்கப்பட்டும், அடித்து துன்புறுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.  இச்செயற்பாடானது நீண்ட காலமாக தமிழர்கள் மீது சிங்கள அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இனவெறித்தாக்குதல்களை ஞாபகப்படுத்துவதாகவே அமைகின்றது. மேலும் வடகிழக்கு தாயக பூமிகள்யாவும் பெளத்த விகாரைகள் நிறுவப்படுவதும் தமிழரது வரலாற்று ஆவணங்கள்யாவும் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகின்றதென்பதை இன் நாளில் வெளிப்படுத்த விரும்புகின்றோம். ஆகவே இவ்வாறான நிலைமைகள் மீண்டும் தொடருமேயானால் இதற்கான மாற்றத்தை புதிய தோற்றத்தின் மூலமாக பிரபாகரன் அவர்களின் எழுச்சிற்கும், வீழ்ச்சிக்கும் நீண்ட இடைவெளிவிடாது  இயற்கை புதிய வரலாற்றை பிறப்பிக்கும் என்று உளமாற நம்புகின்றோம். எனவே அவ்வாறானதொரு சூழல் உருவாகுவதற்கு முன்னர்  சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத்தீர்வு தொடர்பாக  பரிசீலிக்கவேண்டிய கட்டாயத்துக்குள் சர்வதேசம்  தள்ளப்பட்டுள்ளதென்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென உலக தமிழர் சார்பில் சர்வதேச சமூகத்திடம் அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். 

எமது பெரும் மதிப்பிற்குரிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களே! முதலில் அமெரிக்காவின் அதிபராக தாங்கள் அமெரிக்கா மக்களால் தெரிவு செய்யப்பட்டமைக்கு  உலக தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்வடைகின்றோம். அத்தோடு ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலைக்காக ஓங்கி ஒலிக்கும் உங்களின் குரல் நீண்ட பெரும் காலமாக எமது இன விடுதலைக்காக போராடி வரும் எமக்கு நிரந்தரத்தீர்வை பெற்றுத்தருவதற்கு  தமது புதிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். அத்தோடு அமெரிக்காவின் துணையதிபர் மதிப்புக்குரிய கமலாஹரிஷ் அவர்களே! உங்களை நாம் மிகுந்த ஆவலோடும் எதிர்பார்போடும் வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம். ஏனெனில் எம் இனத்தின் வித்துக்களில் ஒன்று தமிழரின் பிரச்சனை தாய்வழியூடாகவும், நேரிலும் தெரிந்து கொண்ட தாங்கள் தமிழர் பிரச்சனைக்கு நிட்சயம் ஒரு தீர்வை முன்னெடுப்பீர்கள் என்ற நீண்ட எதிர்பார்ப்போடு உலகத்தமிழ் இனம் காத்திருக்கின்றது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம்.

மேலும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் நேரடியாக பங்குகொண்டவரும் இலங்கை அரசிற்கும் தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் தூதுவராக செயற்பட்ட நோர்வேயின்பிரதிநிதி எரிக்ஸ்சொல்கெம் அவர்களே! நீங்கள் பேச்சுவார்த்தையில் காட்டிய வேகம் விடுதலைப்போரட்டத்தின் முடிவுக்குப்பின்னர் தமிழ் மக்களை கைநழுவி விட காரணம்மென்ன? அண்மையில் உங்கள் ஐ.பி.சி வானொலி நேர்காணலில் தமிழ் தரப்பு அழைத்தால் நடுநிலை வகிக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தீர்கள். மரியாதைக்குரியவரே தமிழீழ மக்களுக்காக தலைமை தாங்கியவர்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை தாம் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

எனவே தமிழருக்கான தீர்வுதொடர்பில் உங்களுக்கு அதிகமாகவே தெரியுமென எதிர்பார்க்கின்றோம். சிங்களரசின்  நிலைப்பாடுகள் புரிந்தவராகவே  இருக்கின்றீர்கள். ஆனாலும் தமிழரின் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடத்தை அடைந்த நிலையிலும் தமிழர்களுக்கு இன்றுவரை எவ்வகையான தீர்வுத்திட்டமும் முன்வைக்கப்படாமையானது தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், மர்மத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றதென்ற உண்மையை தாங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம் நம்புகின்றோம் என்பதை இம் மாவீரர் நாளில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

தமிழர்கள் ஆகிய நாம் இந்திய  அரசிற்கோ  அல்லது இந்திய மக்களுக்கோ எவ்வித தீங்கும் இதுவரை செய்ய வில்லை. மாறாக இந்திய அரசு அமைதிப்படை என்ற போர்வையில் தமிழரின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்ததோடு தமிழர்களை அழித்து, சீரழித்தமையை நாம் மறக்கவில்லை. அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளை இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து அழித்தொழித்தமையானது  இந்திய அரசு செய்த மிகப்பெரிய வரலாற்றுத்தவறாகவே நாம் கருதுகின்றோம். ஆனாலும் இன்றைய சூழலில் இந்திய அரசு தலையிட்டு ஒரு நிரந்தரத்தீர்வை பெற்று தருமானால் நாம் யாவற்றையும் மறந்து மத்திய அரசு ஊடாக ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வருவோம் என்ற செய்தியை இப்புனித மாவீரர்நாள் செய்தியாக  இந்திய மத்திய அரசிற்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம். அதேநேரம் இந்திய அரசு விடுதலைப்புலிகளை அழித்தமையானது இந்தியாவின்  தெற்கு கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவும், சீன, இலங்கை மதச்சார்புக்கொள்கையும் ஆசிய கண்டத்தில் இந்தியாவின் பலம் கேள்விக்குறியாகியுள்ளதென்பதை இந்தியா என்றோ ஒரு நாள் புரிந்துகொள்ளும். அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தேவையை உணர்ந்து கொள்ளுமென நம்புகின்றோம். இன்நிலையில் இந்திய மத்திய அரசு தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையைநீக்கி தமிழர்தரப்பிற்கு நல்லெண்ண சமிக்கையை காட்டுமானால் தமிழர்தரப்பு இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கமேற்படாதவாறு  சனநாயகரீதியில்  இந்தியாவின் கொள்ளைக்கு மாற்றமில்லாத ஈழத்தமிழர்களுக்கு சாதகமான தீர்வுத்திட்டம் நோக்கி முன்நகர வேண்டுமென பேரன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

மேலும் எமது தாயக விடுதலைப்போரட்டத்தை இன்றும் முன்நிறுத்தி அடுத்த தலைமுறைக்கு பேராட்டத்தை எடுத்துச்செல்லும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கட்க்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு இனிவரும் காலங்களில் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டங்கள்யாவற்றிலும் எழுந்துவரும் இளைய தலைமுறையினரே முன்நின்று நடாத்தவேண்டுமென இம் மாவீரர்களின் புனிதநாளில் அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். எமது பேரன்புகொண்ட தமிழ் மக்களே !  நீண்ட பெரும் காலமாக போராட்ட வாழ்வியலோடு பின்ணிப்பிணைந்த  உங்களுடைய வாழ்க்கை முறையை நாம் அறிவோம். தமிழீழ விடுதலைக்காக நாம் சிந்திய இரத்தமும், வியர்வையும், உயிர்தியாகமும் தமிழர் வாழ்வியலோடு மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகவே கலந்திருக்கின்றது. உங்களின் பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களின் தியாங்கள்  என்றோ ஒரு நாள் நிறைவேறுமென நம்புகின்றோம்.
எம் தேச புதல்வர்களை பெற்றெடுத்த பேரன்புக்குரிய பெற்றோர்களே! உங்களின் புதல்வர்களின் தியாகங்கள் காலத்தால் அழியாதவை. அவர்கள் எம் இதயக்கோவில்களில் பூசிக்கப்படவேண்டியவர்கள். தமிழீழ விடுதலைக்கான அத்திவாரங்கள் என்றும் அழிக்கப்பட முடியாதவை. எனவே இவ்வருடம் அணைத்து தமிழர் தரப்பும் உங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுமாறு வேண்டிக்கொள்ளும்அதே நேரம் சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட மாவீரர்களின் வழியில் சென்று தமிழீழம் பெறும் வரை தொடர்ந்து போராடுவோமாக .......
நன்றி 

த.கதிரவன் 
இணைப்பாளர்
உலகத் தமிழர் இளையோர் ஒன்றியம்
தமிழீழம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

« PREV
NEXT »

No comments