Latest News

July 11, 2020

இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார்
by Editor - 0

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆபத்து இன்னமும் குறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் 4 இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பீசீஆர் பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா நோயாளர்கள் தொடர்பில் போலி பிரச்சாரங்கள் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments