Latest News

August 02, 2017

முன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள் !
by admin - 0

முன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள் !


முன்னாள் போராளிகளை இனியும் தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் திரு.சு.கர்த்தகன் அவசர வேண்டுகோள்.

எமது போராளிகளின் முழுமையான அரசியல் பிரவேசம் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலகநாடுகளின் தடைகளை நாம் உடைத்தெறிய முடியும்

எம் அன்பார்ந்த போராளி நண்பர்களே….

நாம் எமது தேசியத்தை பெறுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக போராடியபோது,எம் அருகே நின்று களம்பலகண்டு எம் மண்ணில் வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் சாதனை வீரர்களும், தாம் நேசித்த மண்ணையும் எமது மக்களையும் புலிகளாக நின்று நாம் ஆளவேண்டுமென்ற கனவுகளை சுமந்தே எம்மை போகும்படி கூறி தம்மை அர்ப்பணித்து இம்மண்ணில் மடிந்துபோனார்கள்.

மேலும் எமது மாவீரர்களின் இறுதிக் கனவுகளை நாம் நனவாக்கவேண்டுமானால் அவர்கள் நம்பிய தோழர்களாகிய நாம் அவர்கள் தாம் மடியும்போதும் எமக்கு விட்டுச்சென்ற விடுதலைக்கான பணிகளை எம் நெஞ்சில் நிறுத்தி தொடர்ந்தும் நாம் எவ்வழிகளிலேனும் போராடினால் மட்டுமே அவர்களும் நாமும் எதிர்பார்த்த உண்மையான இலக்கினை நாம் வென்றெடுக்க முடியும்.

இங்கே ஒரு வரலாற்று அடிப்படை நிகழ்வொன்றை நாம் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.அதாவது இந்த உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்தவர்களும் தமக்கான தனிமையான தேசத்தை தாம் அடிப்படையில் நிறுவுவதற்காக தமது இனம்சார்ந்து தாம் போராடாது தாம் தனித் தேசமாகவோ அன்றி தனியான தேசிய இன மக்களாகவோ தாம் உருவாக்கம் பெற்றதாய் இச்சரித்திரத்தில் எங்கும் நடக்கவில்லை.

மேலும் இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொரு இனங்களும் இன்று தமக்கான தனித் தனித் தேசத்தை உருவாக்கி தாம் சீருடனும் சிறப்புடனும் சமகாலத்தில் இருப்பதற்கு அவர்கள் தம் வரலாற்றில் தமது தேசத்திற்காய் தாம் செய்த மாபெரும் தியாகங்கள்தான் என்றால் அது ஒருபோதும் மிகையாகாது.

உண்மையில் இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு இனத்தவரும் தமது தேசத்துக்காக தாம் போராடியபோது காலத்துக்கு காலம் மாபெரும் இழப்புக்களையும், பாரிய தோல்விகளையும் பல தசாப்தங்களாக தாம் சந்தித்தே இறுதியில் தமது விடாமுயற்சியின் பயனாக தமக்கான சுதந்திர தேசத்தை தாம் நிறுவி இவ்வுலகில் தாம் தனித்தனித் தேசங்களாக உருப்பெற்று தம்மை தலைநிமிர்த்தி வாழ்ந்துவருகிறார்கள்.

இதை இன்னும் சுருக்கமாக நாம் சொல்லவேண்டுமானால் இவ்வுலகிலுள்ள எந்தவொரு இனமும் தமது இனம்சார்ந்து தாம் போராடாது தமது இனத்திற்கான தேசியம் எனும் தனிமையான சுதந்திரத்தை தாம் பெற்றதாக சரித்திரமேயில்லை.

அப்படியானால் தமது தேசியத்தை தாம் பெறுவதற்காக இன்னோர் இனத்தின் தேசியத்திற்கு எதிராக தாம் மாபெரும் போராட்டங்களை தமது இனம்சார்ந்து நிகழ்த்தியே தம்மை இப்பூமிப் பந்தில் இருக்கின்ற ஒவ்வொரு இனங்களும் தமக்குத் தமக்கான நாடுகளை உருவாக்கி சந்தோசமாய் வாழ்ந்துவருகின்றன.

உண்மையில் உலகிலுள்ள எந்தவொரு இனமும் தனது இனம்சார்ந்த தேசியத்தை தனக்கென்று தனியாக உருவாக்காமல் தாம் கௌரவமாக இப்பூமிப்பந்தில் வாழ்ந்துவருவதாக சரித்திலமில்லை.

ஆகவே எம் அன்பார்ந்த போராளி நண்பர்களே…..
அடிப்படையில் எமது தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான எமது விடுதலை இயக்கம் எமது மக்களுக்கான அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போரொன்றைத்தான் இலங்கை அரசுக்கெதிராக நிகழ்திவந்ததென்பதே முற்றுமுழுதான உண்மை.

அந்தப் போரூடாக நாம் எதை எதிர்பார்த்து போரிட்டு வந்தோமோ அதே இலக்கினை பெறுவதற்காக இன்று நாம் ஜனநாயக வழிதனில் அரசியல் களமிறங்கி போராடாமல்விட்டால், கடந்த முப்பதுவருடகால எமது ஆயுதப்போராட்டத்தின் ஊடாக நாம் நிலைநாட்டிய எமது அளப்பெரிய தியாகங்கள் அனைத்தும் காலப்போக்கில் வீணானவையாக எமது இனத்தினால் கருதப்பட்டு கேலிக்கிடமானதாக மாற்றப்பட்டு எமது மாவீரர்களின் புனிதமான உயிர்த்தியாகங்கள் யாவும் மண்ணோடு மண்ணாய் போவதைத்தவிர வேறெதுவும் நடக்காது.

எனவே இந்த உண்மையான களச்சூழ்நிலைகளை நாம் கருத்தில்கொண்டு சமகாலத்தில் எமக்கு சாதகமாய் நிகழ்ந்துவருகின்ற உலக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்றவாறு நாம் எம்மை அரசியல் சக்தியாக மாற்றி முள்ளிவாய்க்கால்வரை சிந்தப்பட்ட எமது பல்லாயிரம் வீரர்களினதும்,மக்களினதும் குருதிகளுக்கும் ஒரு உண்மையான பலாபலனை நாம் பெற்றெடுக்க ஜனநாயகப் போராளிகளாக களமிறங்கி போராட முன்வரவேண்டுமென்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
சு.கர்த்தகன்
கொள்கைப் பரப்புரைச் செயலாளர்
ஐனநாயகப் போராளிகள் கட்சி
“தமிழர் தாயகம்”
« PREV
NEXT »

No comments