Latest News

May 04, 2017

யாழ். இளைஞன் சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி! நீதிபதி இளஞ்செழியன்
by admin - 0

 

உயிரிழந்த ஶ்ரீஸ்கந்தராஜா சுமணனின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனையின் மூலம் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாவதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆறு பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எனினும் பொலன்னறுவை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையை சுட்டிக்காட்டியே, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளார்.

இறந்தவரின் உடலில் ஆறு வெளிக்காயங்களும், 16 கண்டல் காயங்களும், காணப்பட்டதாகவும், மொட்டையான ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் புதுக்காயங்கள் எனவும், உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு :

“இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாவது எதிரியான அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்கபண்டார, இரண்டாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன், நான்காவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் ராஜபக்ஷ, ஐந்தாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் ஜயந்த, ஆறாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க ஆகியோருக்கு தலா பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும், தலா 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், சுமணனது இரத்த உறவினருக்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் மேலும் 1 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.”

« PREV
NEXT »

No comments