Latest News

March 10, 2017

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துக்குப் பின் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்
by admin - 0

 

பிரித்தானியாவில் ஐந்து வருட அகதி அந்தஸ்து விசாவுக்குப் பின்னர் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகாரத் திணைக்களம் அந்த நாட்டின் நிலமைகளை கருத்திற்கொண்டு பாதுகாப்பாக திரும்பிச் செல்லலாமா என்று மீளாய்வு செய்தே முடிவுகளை எடுக்கும் என்று உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.


2017.03.02 என திகதி இடப்பட்டு 2017.03.09 வரை இறுதியாக மீளாய்வு செய்யப்பட்ட உண்விவகார அமைச்சின் Refugee Leave Version 4.0 என்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய அறிக்கையில் Safe Return Review என்ற பிரிவிலேயே குறித்த புதிய அறிவுறுத்தல் இணைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீளாய்வு செய்யும் பொழுது தொடர்ந்தும் பாதுகாப்பு தேவை என்று கருதும் விண்ணபதாரர்களை நிரந்தரவதிவுரிமைக்கு தகுதியுடையவர்களாக கருதும் என்று இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

அவ்வாறு இல்லாதவர்கள் வேறு வழிமுறை மூலம் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

அத்துடன், ஒரு தனிப்பட்டவருடைய நிலையை அவர்களுடைய செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு எத்தருணத்திலும் மீளாய்வு செய்யலாம்.

அதாவது அவர்களுடைய செயற்பாடுகள், நடத்தைகள், குற்றவியல் நடவடிக்கைகள், அவர்களுடைய தீவிரவாத கொள்கைகள் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு மீளாய்வு செய்யலாம்.

இவ்வாறான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது அவர்களுடைய தனிப்பட்ட நிலமைகளை, அதாவது அவர்களுக்கு குழந்தைகள் உள்ளதா, அவர்களுடைய வயது, அவர்கள் இலவசச் சலுகைகள் பெறாமல் வேலை செய்து வரி செலுத்திக்கொண்டிருக்கின்றார்களா, இந்த நாட்டுக்கு அவர்கள் எவ்வாறு பங்களிக்கின்றார்கள் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டே முடிவுகள் எடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

பல சந்தர்ப்பங்களில் உள் விவகார அமைச்சினுடைய கொள்கை தவறு என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணபித்து விட்டு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களை பல மாதங்களாக உள்விவகார அமைச்சு முடிவுகள் எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளவும். 10 நிமிட இலவச ஆலோசனை வழங்கப்படும்.

Jay Visva Solicitors,

First Floor,

784 Uxbridge Road,

« PREV
NEXT »

No comments