Latest News

March 05, 2017

பிரி்த்தானியாவில் வாழும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வதிவிடம் கிடைக்குமா?
by admin - 0

 

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் வதிவிடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உத்தரவாதம் அளிக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிச்சயமற்ற தன்மை ஒன்றை எதிர்நோக்க வழிவகுக்கக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே போன்று வெளிநாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு சுகாதார மற்றும் ஓய்வூதியம் தொடர்பான வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் பிரித்தானியர்கள் தொடர்பில் விரைவில் சிறந்த தீர்வொன்று எட்டப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments