Latest News

March 09, 2017

இனிமேல் மனிதாபிமான விசா கிடையாது! தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம்
by admin - 0

தஞ்சம் கோரும் நோக்கில் மனிதாபிமான விசா விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கப்படத் தேவையில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் (European Court of Justice) அதனுடைய உறுப்பு நாடுகள், மற்றைய நாடுகளிலிருந்து தஞ்சம் கோரும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் உள்நுழைவதற்குரிய மனிதாபிமான அடிப்படையிலான விசாக்களை விண்ணப்பிக்கும் பொழுது அவ்வாறான விசாக்களை வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அண்மையில் சிரிய அகதி குடும்பம் ஒன்று லெபனான் நாட்டிலுள்ள பெல்ஜிய நாட்டுத் தூதரகத்தில் பெல்ஜியத்திற்குச் சென்று தஞ்சம் கோரும் நோக்கத்துடன் மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.

பெல்ஜிய அதிகாரிகள் இந்த விசா வழங்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் பெல்ஜியம் சென்று தஞ்சம் கேட்டு 90 நாட்களுக்கு மேல் நின்றுவிடுவார்கள் என்று தெரிவித்து இந்த விசாவை மறுத்திருந்தார்கள்.

இதனை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இவ்வாறு விசா வழங்கப்பட வேண்டிய தேவை இல்லை என்று 07 மார்ச் 2017 அன்று தீர்ப்பளித்துள்ளது. 

இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

http://curia.europa.eu/juris/documents.jsf?num=C-638/16

இலங்கையிலிருந்து தஞ்சம் கோரும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்தாலும் விசா மறுக்கப்படும் என்பதையே இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுக்கின்றது.

« PREV
NEXT »

No comments