Latest News

March 16, 2017

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களைப் துண்டு துண்டாக வெட்டி களணி ஆற்றில் போட்டோம்!!
by admin - 0

கடத்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கடற்­ப­டை­யி­னர் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­யதா ­கவும், திரு­கோ­ண­ம­லை­யில் அமைந்­தி­ருந்த நிலத்­தடி முகா­மில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­களை பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில் முகா­முக்கு வெளியே எடுத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர்.

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் தலை­ந­கர் கொழும்பு மற்­றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளி­லி­ருந்து 5 மாண­வர்­கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டுக் காணா­மற்­போ­கச் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு நீதி­மன்­றில் நேற்­று­முன்­தி­னம் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, முதன்­மைச் சாட்­சி­யா­ள­ரான கப்­டன் வெகெ­தர ஆகி­யோ­ரின் வாக்கு ­மூலங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மன்­றில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த சில்வா மன்­றுக்கு மேல­திக விசா­ரணை தொடர்­பில் எடுத்­து­ரைத்­தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் நான் விசா­ரணை செய்து வரு­கின்­றேன். கடத்­தப்­பட்ட 11 பேரும் கொழும்பு சைத்­திய வீதி­யில் உள்ள பிட்டு பம்பு, திரு­கோ­ண­மலை நிலத்­த­டிச் சிறைக் கூட­மான கன்­சைட் ஆகி­ய­வற்­றில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­குத் தெளி­வான ஆதா­ரங்­கள் உள்­ளன.

இந்­தக் ­கடத்­தல்­கள் கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண்­டர் ஹெட்டி ஆராச்­சி­யின் கீழ் இயங்­கிய குழு­வி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள­ மைக்­கான ஆத­ரங்­கள் உள்­ளன. அவை அனைத்­தும் இன்று மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளில் பல தக­வல்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­தக் ­கடத்­தல் தொடர்­பி­லான முதல் சந்­தே­க­ந­ப­ரான சம்­பத் முன­சிங்­க­வின் கீழ் சேவை­யாற்­றிய உபுல் பண்­டார எனும் கடற்­ப­டைச் சிப்­பாய் தன்­னி­டம் தெரி­வித்­தார் என இரண்­டா­வது சந்­தே­க­ந­ப­ரான கொமாண்­டர் சுமித் ரண­சிங்க அவ­ரது வாக்­கு­மூ­லத்­தில் சில விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­க­ளில் நால்­வரை திரு­ம­லைக்­குக் கொண்டு போகும் வழி­யில் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­விட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்த விவ­கா­ரத்­தில் பிர­தான சாட்­சி­க­ளில் ஒரு­வ­ரான கப்­டன் வெல­கெ­தர தனது சாட்­சி­யத்­தில் பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­னார். திரு­மலை கன்­சைட் முகா­மில் சேவை­யில் இருந்­த­போது அத­னுள் இருந்து கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­க­ளைப் பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில் முகா­முக்கு வெளியே எடுத்­துச் செல்­வதை தான் அவ­தா­னித்­தார் என அவர் எம்­மி­டம் சாட்­சி­யம் அளித்­துள்­ளார்.
கன்­சைட் முகா­மில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மற்­றொரு கடற்­ப­டைச் சிபா­யின் வாக்கு மூலத்­துக்கு அமை­வாக அங்கு இருந்த அனை­வ­ரும் படிப்­ப­டி­யா­கக் கொல்­லப்­பட்­டுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த ஐந்து மாண­வர் உள்­ளிட்ட 11 பேரும் கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் அல்ல

இந்த விசா­ர­ணை­கள் கடற்­ப­டையை இலக்­காக வைத்து இடம்­பெ­று­வ­தா­க­வும் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் என­வும் பல­ரால் கூறப்­ப­டு­கி­றது. உண்­மை­யில் இந்த விசா­ர­ணை­க­ளால் தேசிய பாது­காப்­புக்கு எவ்­வித அச்­சு­றுத்­த­லும் இல்லை. முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பா­ய­வின் உத்­த­ர­வுக்கு அமை­யவே இந்த விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்­தச் ­சம்­ப­வத்­து­டன் கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள தொடர்பு குறித்து நாம் முத­லில் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் கூறி­ய­போது, இது தேசிய பாது­காப்பு விவ­கா­ரம் அல்ல.

அவர்­கள் தனிப்­பட்ட ரீதி­யில் செய்­துள்­ளார்­கள். நீங்­கள் உங்­கள் விசா­ர­ணையை தொட­ருங்­கள் என்று அவர் எமக்கு உத்­த­ர­விட்­டார். அப்­போ­தைய தேசிய புல­னாய்­வுப் பிரிவு பணிப்­பா­ளர் ஹெந்த விதா­ர­ணவு­ டனும் நாம் இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­ய­போது அவ­ரும் இத­னையே பதி­லாக அளித்­தார். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டும் வகை­யில் எந்த விசா­ர­ணை­யை­யும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­னார்.

தேடு­தல் தொடர்­கின்­றது

பிரதி சொலி­சிட்­டர் ஜென­ரல் டிலான் ரத்­நா­யக்க கருத்­துக்­களை முன்­வைத்­தார். இந்­தச் சம்­ப­வம் குறித்து நேர­டி­யா­கத் தொடர்­பு­பட்ட மேலும் இரு­வர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். அவர்­க­ளைத் தேடி வரு­கின்­றோம். இத­னை­விட இந்த விவ­கா­ரத்­து­டன் கட்­டளை ரீதி­யாக அல்­லது ஆலோ­சனை ரீதி­யா­கத் தொடர்­பு­பட்ட உயர் அதி­கா­ரி­கள் தொடர்­பில் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை தொடர்­பில் நாம் தொடர்ந்து பரி­சீ­லித்து வரு­கின்­றோம் – என்­றார்.

இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்­பின் சட்­டத்­த­ர­ணி­யான அச்­சலா சென­வி­ரத்ன வாதிட்­டார். ஒவ்­வொரு முதல் அறிக்­கை­யி­லும் பெயர் குறிப்பி டப்­பட்­டுள்ள லெப்­டி­னன்ட் கொமான்­டர் ஹெட்டி ஆராச்சி இன்­னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. அவர் தலை­ம­றை­வா­கி­விட்­ட­தாக நாம் கேள்­விப்­ப­டு­கி­றோம். இத­னை­விட இந்த வழக்­கின் முதல் சந்­தே­க­ந­பர் லெப்­டி­னன்ட் கொமாண்­டர் சம்­பத் முன­சிங்க பிணை­யில் உள்­ளார்.

இந்த வழக்­கு­டன் அவ­ருக்கு உள்ள தொடர்பு குறித்­துத் தெளி­வாக விசா­ர­ணை­க­ளில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், அனை­வ­ருக்­கும் எதி­ராக குற்­ற­வி­யல் சட்­டத்­தின் 296 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய குற்­றச்­சாட்டு உள்ள நிலை­யில் அவ­ரது பிணையை நீக்கி அவ­ரை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க வேண்­டும் என்று கோரி­னார்.

இதன் பின்­னர் சந்­தே­க­ந­பர்­கள் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி பிணை கோரி­னார். முதன் மைச் சாட்­சி­யான வெல­கெ­தர மனி­தக் கடத்­தல் சம்­ப­வம் தொடர்­பில், தற்­போது கைதா­கி­யுள்ள 2 ஆம் சந்­தேக நப­ரு­டன் கோபத்­தில் இருந்­தார். அத­னால் பொய்­யான விட­யங்­களை முன்­வைப்­ப­தா­க­வும் சட்­டத்­த­ர­ணி­கள் குறிப்­பிட்­ட­னர். யாரோ சில­ரின் தேவைக் காக குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு, கடற்­ப­டைப் புல­னாய்­வுப் பிரிவை இலக்கு வைப்­ப­தா­கக் குற்­றம் சுமத்­தி­ய­து­டன் இந்­தக் ­கைது­க­ளி­னால் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் சுட்­டிக் காட்­டிப் பிணை கோரி­னர்.
srilanka

சட்­டமா அதி­பர் பிணை வழங்­கக் கடும் ஆட்­சே­பனை தெரி­வித்­தார். 7 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சட்ட விரோ­த­மா­கக் கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­கள் 7 வரு­டங்­க­ளாக இல்லை என்­ப­தால் அவர்­கள் கொலை செய்­யப்­பட்­டு­விட்­ட­தா­கவே அர்த்­தம். இதற்கு பிணை வழங்க முடி­யாது என்­றார். பாதிக் கப் பட்­ட­வர் கள் தரப்­பும் பிணைக்கு ஆட்­சே­பம் வெளி­யிட்­டது.

பிணை தொடர்­பில் ஆட்­சே­பங்­களை எதிர்­வ­ரும் 24 ஆம் திகதி எழுத்து மூலம் மன்­றில் சமர்ப்­பிக்க உத்­த­ர­விட்ட நீதி­வான் வழக்கை அன்­றைய தினத்­துக்கு ஒத்தி வைத்து அது­வரை விளக்க­ மறி­ய­லில் இருந்து வரும் இரு சந்­தேக நபர்­க­ளை­யும் தொடர்ந்து அவ்­வாறே தடுத்து வைக்க உத்­த­ர­விட்­டார். பிணை­யில் உள்ள லெப்­டி­னன்ட் கொமாண்­டர் சம்­பத் முன­ சிங்­க­வின் பிணையை நீக்கி அவரை புதிய குற்­றச்­சாட்­டின் கீழ் விளக்­க­ம­றி­ய­லில் வைப்­பதா? இல்­லையா? என்­ப­தை­யும் அந்­தத் திக­தி­யில் மன்­றுக்கு அறி­யத்­த ­ரு­மாறு சட்ட மா அதி­ பருக்கு நீதி­வான் பணித்­தார்.
« PREV
NEXT »

No comments