Latest News

February 27, 2017

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
by admin - 0

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 
மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். 

இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். 

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.

1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.

-ஈழம் ரஞ்சன்-
« PREV
NEXT »

No comments