Latest News

January 25, 2017

உலகத்தமிழ் மக்களின் ஒற்றுமையான போராட்டம் மகிழ்ச்சி அளிக்கின்றது.
by admin - 0

உலகத்தமிழ் மக்களின் ஒற்றுமையான  போராட்டம் மகிழ்ச்சி அளிக்கின்றது 

சுவிஸ் அரசியல் பிரமுகர் ஈழத்துப்பெண்மணி தர்சிகா தெரிவிப்பு 

 
 
தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக   போராடிவருகின்றார்கள் இந்த நிலையில் போராட்டம் வெற்றிபெற்றுள்ளமையானது    தனக்கு மகிழ்சி அளிப்பதாக சுவிட்சர்லாந்து ஈழத்து பெண்மணியும் அரசியல்வாதியான கிருஸ்ணந்தம் தர்சிகா தெரிவித்துள்ளார்.





இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமைதியான முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக நடந்த ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஆனால் இறுதித் தருனத்தில்   நடைபெற்ற வன்முறைச்சம்பவங்கள் மனத்துக்கு வேதனையளிக்கிறது'' என்றும் மேலும் தர்சிகா குறிப்பிட்டார்.



 மேலும் அவர் தெரிவிக்கையில், 7 நாட்களாக தமிழகம் தமிழர்கள் வாழும் நாடுகளில் நடைபெற்று வந்த அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகின்றேன் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாராம்பரிய பல நூற்றாண்டு காலமாக விளையாடும் விளையாட்டு அதனை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதே ஒவ்வொரு தமிழ்மக்களின் மனநிலையாகும் இதன் எதிரோலி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது அதற்கு ஆதரவாக பல நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றினைத்து போராட்டங்களையும் ஆதரவுக்குரல்களை மேற்கொண்டுவந்தோம். இந்த   தமிழ்  மக்களின் நீதியான போராட்டம் இன்று வெற்றிபெற்றுள்ளது இவ்வாறு தமிழ் மக்கள் எமது உரிமைகளுக்காக ஒன்றினைத்து போராடியனால் உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும்  இதற்காக பேராட்டங்களையும் ஆதரவுகுரல்களையும் வழங்கி அனைத்து  மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
« PREV
NEXT »

No comments