Latest News

January 16, 2017

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்...! வல்வெட்டித்துறைக்கு வருவாரா.....?
by admin - 0

உலகில் ஈடு இணையில்லா தலைவர்களில் தமிழீழ தேசியத் தலைவர்மே தகு வே . பிரபாகரன் அவர்களும் ஒருவர். தமிழ் மக்களின் விடுதலைக்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்தார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் ஏந்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் போராடியிருந்தார்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனினும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆதாரத்தையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாத நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பை மறுத்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரின் மரணம் தொடர்பான செய்தி இன்று வரையிலும் பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இருந்து கொண்டிருக்கின்றது.

 தமிழீழ தேசியத்  தலைவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ள நிலையில், அதற்கு இலங்கை அரசாங்கம் இது வரையிலும் சரியான பதிலை வழங்கவில்லை.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்  தமிழீழ தேசியத் தலைவர்மேதகு வே .பிரபாகரனின் மரணம் தொடர்பில் அவரின் மரணச் சான்றிதழை கோரியுள்ள போதிலும், அதற்கும் இலங்கை அரசாங்கம் உரிய பதிலை வழங்கியதாக இல்லை.

மேலும், முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்துக்களும் அவ்வப்போது அவரின் மரணம் தொடர்பான செய்தியினை பொய்யாக்கும் வகையில் இருந்துகொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் அண்மைய காலமாக  தமிழீழ தேசியத் தலைவர் வே . பிரபாகரன் குறித்து பேசத்தொடங்கியுள்ளனர். குறிப்பாக மத்திய அரசாங்கத்தில் இருக்க கூடிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில்  தலைவர் குறித்து பேசியிருந்தார்.

அவரது அந்த பேச்சி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் பாரிய சர்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வட மாகாண சபையின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பா.டெனிஸ்வரன்  தமிழீழ தேசியத் தலைவர்கு றித்து  பேசியிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பட்டப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பேசியிருந்தார்.

"அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அடிமைத்தனத்தில் இருந்து எம்மக்களை மீட்டு அவர்களுடைய உரிமையுடன் அவர்களை வாழவைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அவர் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். அவரது நோக்கம் நேர்மையானது.

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்."

அவரது இந்த பேச்சு தமிழ் மக்கள் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையிலும் இலங்கை அரசாங்கம் மறைமுகமாக தெரிவித்து வரும் ஒரு விடயத்தை நேற்றைய இந்த பேச்சு வெளிப்படையாக எடுத்து காட்டியிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சாதாரண மக்களை தவிர்ந்து இன்று அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்புகளில் இருக்க கூடிய தமிழ் அமைச்சர்கள் தலைவர் குறித்து பேசுவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments