Latest News

January 30, 2017

தனியார் பேருந்து நடத்துனர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர்
by admin - 0

தனியார் பேருந்து நடத்துனர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்...
bus 

எ9 வீதியில் புதுக்காடுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 12.00 மணிக்கு  புறப்படட திருகோணமலை இ.போ.ச. வும் (WP NP 3308) தனியார் பேருந்தும் (SG NF 4597) போட்டி போட்டு முந்திக்கொள்கின்ற வேளையில் முரண்பாடு ஏட்பட்டு கைகலப்பில் முடிந்தது...


இ.போ.ச. வில் இருந்த இராணுவ வீரர்கள் 6 பேரே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி மீது இந்த தாக்குதலை மேட்கொண்டனர். தாக்குதலை மேட்கொண்ட வேளை இருந்த வேகம் போலீஸ் வந்து விசாரணை செய்யும் போது அந்த இராணுவ வீரர்களிட்கு இல்லை... பேடிகளாக மௌனம் காத்து விட்டு அடுத்த பேருந்தில் தப்பி சென்று விடடார்கள்... 


இரண்டு பஸ் நடத்துனர் மற்றும் சாரதியால் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பயணித்த பயணிகளில் சிலரும் விசாரணைக்கு உள்ளாக்கப்படடார்கள். இதனால் ஏறதால மூன்று மணித்தியாலங்கள் கிளிநொச்சியில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...

இராணுவ வீரர்கள் மற்றும் இ.போ.ச. வினர்  தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது குடி மற்றும் போதை பொருள் பாவித்து வாகனம் ஓட்டிய தாக போலீஸிடம்  எடுத்துக்கூறினர்.... போலீஸ் விசாரணையில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி குடி போதையில் இருந்ததாக தெரிய வரவில்லை...


தனியார் பேருந்தில் பயணித்த அனைவரையும் இ.போ.ச. மாற்றி தனியாக மீண்டும் டிக்கெட் போடடார்கள்  இ.போ.ச. வினர். தனியார் பேருந்தில் வந்தவர்கள் தனியார் பேருந்தின் டிக்கெட்டை காட்டி நீங்கள் சண்டை பிடித்து எங்களை உங்கள் பஸ்ஸில்  ஏற்றி டிக்கெட் போடக்கூடாது என்று சொன்னதுக்கு  அந்த பஸ்ஸில் உங்களை யார் ஏற சொன்னது என்று திமிராகவும் இ.போ.ச. கூறி இருக்கின்றார்கள்...


தனியார் பேருந்து எண்ணிக்கை குறைவாகவும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக்க கண்ணப்படுகின்ற வேலை இ.போ.ச. வினரின் இத்தகைய நடவடிக்கை மற்றும் பயணிகளை அல்டசியப்படுத்ததும் போக்கு கண்டிக்க தக்க செயலாகும்...

தனியார் பேரூந்துக்கும் இ.போ.ச.  வினருக்கும் நடக்கும் இந்த போட்டியில் பயணிகள் விபத்துக்குள்ளாவதும்
பயணிகள் உரிய நேரத்தில் பயணம் செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்
« PREV
NEXT »

No comments