Latest News

January 07, 2017

கற்பிக்கும்போது சரியாக செவிமடுத்து கற்றதே எனது வெற்றிக்கு காரணம்-கலைப்பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி
by admin - 0

 

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று மு/விசுவமடு மகா வித்தியாலய மாணவி செல்வி மகேந்திரராசா டனோஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.

தனது வெற்றிப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த டனோஜா,

நான் இன்று மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன் அதற்கு காரணம் இன்று எனது எனது உயர்தரபரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

நான் கலைப்பிரிவில் வரலாறு,புவியியல்,தமிழ் 3A பெறுபேற்றை பெற்றுள்ளேன்.என்னுடைய இந்த பெருபெர்ருக்கு முழுக்காரணமும் எனது பாடசாலை மு/விசுவமடு மகா வித்தியாலயத்தையே சாரும்.எனது பாடசாலை அதிபர் அன்டன் குலதாஸ்,தமிழ் பாட ஆசிரியர் ஜெயந்தன்,புவியியல் பாட ஆசிரியர் ஜெயபாலன் வரலாற்று பாட ஆசிரியர் பவித்ரா எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.


மற்றும் நான் இச் சித்தியை பெறுவதற்கு உற்சாகமும் முழு ஒத்துழைப்பும் தந்த எனது பெற்றோர்,சகோதரன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.அத்துடன் எனக்கு பாடம் சம்மந்தமாக வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து “உன்னால் முடியும் முயன்றால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை”என்று நாளுக்கு நாள் ஊக்கமும் அறிவுரையும் தந்த எனது தமிழ் ,வரலாற்று,புவியியல் பாட ஆசிரியர்களையும் இந்த நேரம் நினைவில் கொள்கின்றேன்.

நான் பாடசாலையிலும்,பிரத்தியேக வகுப்புகளிலும் கற்பிக்கும் விடயங்களை குறிப்பெடுத்து வீட்டில் கற்கும் நேரத்தை அதிகரித்ததால் தான் இந்த பெறுபேற்றை பெற முடிந்தது.இனி வரும் காலங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இதனை பின்பற்றினால் வெற்றி இலக்கை அடைய முடியும்.ஆனால் நான் நித்திரை முழித்தோ அதிகாலையில் எழுந்தோ ஒருநாள் கூட படித்ததில்லை.

நான் நினைக்கின்றேன் ஆசிரியர்கள் கற்பிக்கும்போது அதனை சரியாக செவிமடுத்து உள்வாங்கி கற்றதே எனது இப் பெறுபேறுக்கு காரணம்.

« PREV
NEXT »

No comments