Latest News

November 12, 2016

ஆசிரியர் கலாசாலைப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்வி அமைச்சு முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்!
by admin - 0

 
ஓன்பது மாதங்ளாகியும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படாதமையால் தாம் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படவில்லை எனவும் அதனால் தமக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களமும் கல்வி அமைச்சும் வேண்டுமென்றே தமது பெறுபேறுகளை வெளியிடாமல் காலங்கடத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுவதுடன் தமது பரீட்சைப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்து தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் தமக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட 01.07.2013 ஆம் திகதியிலிருந்து வழங்குமாறு கோரியுள்ளார்கள்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடப்படாதமையால் தாம் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாதமையால்  தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தமது பரீட்சைப் பெறுபேறுகளைக் கலந்தாழ்த்தாது விரைவாக வெளியிட்டு தமக்கான சம்பளத்தையும் அதிகரித்து, தமது சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் 01.07.2013 ஆம் திகதியிலிருந்து வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்கக் கல்வி அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் மற்றும் வடக்கு மாகாகணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கு கோரிக்கைக் கடிதங்களை அனுப்பியும் தமக்கான எந்தவொரு பதிலும் இதுவரை தமக்குத் தரப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்கள் கூறிக் கவலை தெரிவிக்கின்றார்கள்.

வடக்கு மாகாணத்திலுள்ள வன்னிப் பகுதிகளில் யுத்த காலம் உட்பட நீண்ட காலமாகச் சேவையாற்றிய தமது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை 9 மாதங்களாகியும் வெளியிடாமல் தம்மைப் பழிவாங்காது தமது பெறுபேறுகளை விரைவாக வெளியிட்டு தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் 01.07.2013 ஆம் திகதியிலிருந்து உள்ளீர்ப்புச் செய்து தமக்கான சம்பள நிலுவைகளையும் அக்காலப் பகுதியிலிருந்து வழங்கி உதவ பொறுப்புவாய்ந்தவர்கள் குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா விரைந்து நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தொடர்ந்தும் தமது பெறுபேறுகளை வெளியிடாமல் காலங்கடத்தப்படுமாகவிருந்தால் பாதிக்கப்பட்ட தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு முன் போராட்டம் நடத்தவுள்ளதாக தாம் முடிவெடுத்துள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

« PREV
NEXT »

No comments