Latest News

November 03, 2016

ஜெயலலிதா நலம்... ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றம் - செயற்கை சுவாசம் கருவி அகற்றம்
by admin - 0

அதிமுக
முதல்வர் ஜெயலலிதா உடல் நலமடைந்து வருவதை முன்னிட்டு அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு விட்டதாகவும், அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாற்பது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இயல்பாக சுவாசிக்கும் ஜெயலலிதா ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன


ஜெயலலிதா சிகிச்சை 


கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்படவே செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.

தொண்டர்கள் பிரார்த்தனை 



43வது நாளாக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் ஆலயங்கள், மசூதிகள், சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.


வருகிறார் அம்மா 



அதிமுகவின், தொலைத்தொடர்பு பிரிவு செயலாளர் ஹரி பிரபாகரன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும், அவர் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் கடந்த இரு தினங்களுக்கு முன்புஅவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் கூறியது போலவே ஜெயலலிதா தற்போது சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

\
« PREV
NEXT »

No comments