Latest News

October 29, 2016

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகள் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகவுள்ளன?
by admin - 0

 
2016 மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பரீட்சைப் பெறுபேறுகள் கார்த்திகை மாதம் முதலாம் திகதி அன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுளது. இப்படியாகப் பல தடவைகள் கூறப்பட்டு வாந்தி பரப்பப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இரண்டாண்டு முழு நேர ஆசிரிய பயிற்சிகளை முடித்து இறுதிப் பரீட்சையை கடந்த 2016 மார்ச் மாதம் எழுதிவிட்டு வெளியேறிய ஆசிரியர்களது பரீட்சைப் பெறுபேறுகளை நீண்ட காலமாகிவிட்ட போதிலும் கல்வி அமைச்சின் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிடாமல் ஏனோதானோ என்ற அசமந்தப் போக்கில் இருப்பதாகக் குறை கூறப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

 கடந்த காலங்களிலும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிடாமல் இழுத்தடித்து காலங்கடத்தி தாமதித்தே வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, க.கொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர் தரப் பரீட்சை, கல்வியற் கல்லூரி இறுதியாண்டுப் பரீட்சைகள் போன்றவற்றை வெளியிடுவதற்காக கல்வி அமைச்சும் இலங்கைப் பரீட்சைத் தினைக்களமும் குறிப்பிட்ட கால எல்லை அட்டவணையைக் கொண்டு உரிய காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுகின்ற போதிலும் இலங்கையில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் இறுப் பரீட்சைப் பெறுபேறுகளை எப்போது வெளியிடுவது என்ற கால எல்லை எதனையும் கொண்டிருக்காமல் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு பரீட்சை எழுதிய ஆசிரியர்கள் தமது பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபட்டதன் பின்னரே வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகது.

கடந்த 2016 மார்ச் மாதம் இலங்கையிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நடைபெற்று பல தடவைகள் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என வதந்திகள் பரப்பப்பட்டு பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களை ஏமாற்றமடைய வைத்த மேற்படி பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுகும் வதந்தியா அல்லது அன்றைய தினம் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுமா என்பதும் கூறமுடியாத சந்தேகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments