Latest News

October 29, 2016

கை ரேகை பதிவிட்ட தமிழக முதல்வர்- கவலைக்கிடமாக ஜெயலலிதாவின் உடல்நிலையா?
by admin - 0

அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்

 

சென்னை: தஞ்சை, அரவக்குறிஞ்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.


தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றத்திலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனிடையே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாளர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் சேர்த்து வழங்கினால் தான் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும்.

இந்த அத்தாட்சிக் கடிதம், form-B எனப்படும். இந்த படிவம் தேர்தல் நடத்தும் அந்தந்த தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும். இதில், தொகுதியின் பெயர், தொகுதியின் எண், போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துடன் அனுப்பப்படும்.


இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்குப் பதிலாக அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் உள்ளது.



« PREV
NEXT »

No comments