Latest News

September 23, 2016

மக்களை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய போராட்டங்களே வரலாறுபடைக்கின்றன. வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது...! – ஈழத்து நிலவன்
by admin - 0

மக்களை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய போராட்டங்களே வரலாறுபடைக்கின்றன. வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது...!
– ஈழத்து நிலவன் –
 

இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பெயரால் பல ஆண்டுகளாக நீதி விசாரணைகள் மறுக்கப்பட்டு சிறைக்கூடங்களுக்குள் முடமாக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் இருண்டதாகவே தொடர்கின்றது.
 
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இனவழிப்பானது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தற்போதைய நல்லாட்சி அரசும் தொடர்ந்து வருகிறது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்

நமது அடயாளங்கள் அழிக்கப்படும் போது...தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது...
தமக்கான அதிகாரம் ஒடுக்கும் போது...தனது இனத்தின் உரிமை,சமத்துவத்திற்காக
ஒரே நோக்குடன் செல்லும் பாதையே போராட்டம்...
மக்கள் புரட்சி அரச பயங்கரவதங்களுக்கும் முதலாளித்துவ சுரண்டல்களுக்கும் எதிராக வெடிக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள் முதலில் உணர வேண்டும். தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள - பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கை வகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும். மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.

ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று. ''சிறந்த அரசியல் போராளியானவன் சிறந்த படைத்துறை வீரனாக இருக்க வேண்டும். அதாவது எமது மண்ணின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்பதற்கு அல்லது எதிரி எமது நிலத்தைக் கபளீகரம் செய்வதைத் தடுப்பதற்கு நாம் சிந்துகின்ற இரத்தத்தின் விலை தெரிந்தவர்கள் அரசியலை நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.''

மகிந்த ராஜபக்ச வெளிப்படையாய் இனவாதம் பேசிக்கொண்டே ஈழ மண்ணை அபகரித்து சிங்கள பௌத்தத்தை திணித்தார். மைத்திரியும் ரணிலும் தமிழரின் உரிமையைப் பற்றி பேசிக்கொண்டும், சமத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டும், தமிழர் நில விடுவிப்பை பற்றிப் பேசிக்கொண்டும், இன நல்லிணக்கத்தைப் பற்றி பேசிக்கொண்டும், தமிழர் நிலத்தை சுவீகரிக்க முற்படுகிறார்கள். ஈழத்தில் சிங்கள பௌத்த அடையாளங்களை திணிக்கிறார்கள்.
அதற்கான அண்மைய இரு உதாரணங்கள்:
* இராணுவத்திற்காய் வட்டுவாகல் காணி சுவீகரிக்க முற்பட்டடு
* கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்க தொடங்கியுள்ளமை
திட்டமிட்டு எமது வாழ்விடங்களை ஆக்கிரமித்து எமது இனத்தின், மொழியின், மதங்களின் அடையாளங்களைப் படிப்படியாக அழிக்கும் ஒரு அந்தரங்க செயற்பாட்டின் அங்கமே

விடுதலை உரிமைக்காக போராடிய ஈழத் தமிழர்கள் இன்று நிலத்தில் வாழ்வதற்காய் போராடுகின்றனர் ஈழத் தமிழர் நிலத்திற்கான பாதுகாப்பு அவசியமானது. தமிழர் நிலத்தில் தமிழர் வாழவும் ஆளவும் உரிமை அவசியமானது. தமிழர் நிலத்தை அபகரிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவருகிறது. இராணுவத்திற்காகவும் சிங்களக்குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படுவதுடன் நிலத்திற்கான மக்களின் உரிமையை பறித்து அந்நிய நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன.

"ஆமாம் சாமி" என தலையாட்டும் தமிழனும் "நீயே கதி" என சிங்களவர் கால் பிடித்து வாழும் தமிழனும் பொறுத்து போகும் குணத்தால் மட்டுமே இலங்கையில் இன்று பொய்யான மாயைத் தோற்றம் தரும் இன ஒற்றுமை நிலவுகிறது. தமிழ் மக்களை அடிமையாக்கி அரசியல் இலாபம் பெறும் கூட்டமைப்பு எந்தவகையில் எமது பிரதிநிதிகள் என நாம் நம்புவது?
கொள்கை இல்லாத தலைவனை வேறு எப்படி சித்தரிப்பது?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றனரே தவிர தமக்கு வாக்களித்த மக்களுக்கு எதனை உருப்படியாக செய்துள்ளனர்? அவர்களுக்கு மனச்சாட்சி இருக்குமாயின் தம்மை தாமே கேட்டுக் கொள்ளவும். விருப்பு, வெறுப்புகளில் இருந்தே இங்கே அனைத்தும் பார்க்கப்படுகிறது.

ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது....இலகுவான போராட்டம் போராட்டம் அல்ல பித்தலாட்டம்...போராட துணியாதவன் போலியான போராட்டத்தை தொடர்ந்து செய்கின்றான் போராடுகின்றோம்என்று மக்களை ஏமாற்றுகின்றான்.

சிறைக்கைதிகள் விடுதலை, அபகரிப்பு நிலங்கள் விடுவிப்பு, சிங்களக் குடியேற்றம், புத்தவிகாரை அமைத்தல், இனப்பிரச்சினைத் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம் இவற்றில் இது வரை நடந்தவை என்ன? ஆனால் தமிழினம் போராடும் தேவை மட்டும் வீச்சுக் கொண்டு வளர்ந்து வருகிறது. நிதானமான, தெளிவான, ஆழமான கருத்துக்கள், தமிழர்கள் எல்லோரிடமும் இருக்கவேண்டிய பட்டறிவு.

1958 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழர்களிற்கு எதிரான இனக்கலவரங்களும் 2009 இல் நடந்தேறிய கொடூர இனப்படுகொலைகளும் யாராலும் நியாயப்படுத்த முடியாதவை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா? அல்லது அடிபட்டுச் சாவதா? வீழ்ந்தாலும் வீறுகொண்டு எழுவதா? என்பதை பாதிக்கப்பட்ட தமிழர்களே தீர்மானிப்பார்கள். கடந்த அறுபது ஆண்டுகளாக இனமுரண்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உலகம் பூராகவும் வலிகளோடும் வெறுமையோடும் வாழ்கிறார்கள். இயந்திரமாய் அவர்கள் சுற்றி அலைந்தாலும் இதயத்துடிப்பில் இனத்துடிப்பும் எப்போதும் கலந்தே இருக்கிறது.
நாம் நமது மொழி மீது, வரலாற்றின்மீது, கலை,பண்பாட்டுக் கூறுகளின் அடித்தளத்தின் மீது ஆழமாக வேரூன்றியபடியே காலத்தை நகர்த்தவேண்டும். மொழிசார்ந்த, கலைசார்ந்த, பண்பாடு சார்ந்த, தமிழர் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை முடிந்தவரை முன்னகர்த்த வேண்டும். நாம் நாமாக இருந்து, நாமாக வாழ்ந்தால் வரலாறு நமக்கும் ஓர்நாள் வழிவிடும்.

புலம்பெயர் சமூகத்திலும் ஈழத்திலும் சிலர் அரசியல் கூத்தாடிகளாக வலம்வந்து தங்கள் கரங்களில் கிடைத்திருக்கும் அதிகார பலத்தை வீணடிப்பது மிகக்கொடுமை. இவை பற்றி அதிகம் நாம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. எப்படியிருப்பினும் வரலாற்றின் நீண்ட பாதையில் தீயவை அகற்றப்பட வேண்டும்.

வெளிநாட்டு அரசுகளுக்கு எமது பிரச்சனைகளை பற்றி எமது தேவைகளை பற்றி சொல்வதற்கு பதிலாக,
அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை எம்மவர்களிடம் கொண்டுவந்து சேர்த்து நடைமுறைப்படுத்தும் பணியையே,
சில அரசியல் செயற்பாட்டாளர்கள் செய்கின்றார்கள். ஆனால் இந்த சில செயற்பாட்டாளர்களே வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்பில் உள்ளார்கள். காலம் மாறுவது எப்போது?

தமிழர்கள் தமக்கான அரசியலையும் அதன் பின்புலத்தையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ளுதல் மிக அவசியமானது ஆகும். எமது பிரச்சினைகளை உணர்வுகளால் புலமைசார்ந்து எதிர்கொள்ளும் நிலமை எமது மக்களிடம் மேலும் வளம்பெற வேண்டும். *"அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டால் அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும் "*
தன்னுடைய சுயத்தையும் இழந்து இந்த சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடுபவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள் ! உலகை இயங்குவது இரண்டு... ஒன்று அறிவியல்... மற்றொன்று அரசியல்...

அரசியல் வன்முறை இருவகைப்பட்டது ஒன்று பிற்போக்கானது மற்றது புரட்சிகரமானது. ஒன்று அடக்கு முறையையும் அடிமைத்தனத்தையும் நீடிப்பது, மற்றது விடுதலைக்கும் விடிவிற்க்கும் வித்திடுவது. ஒன்று ஒடுக்குவோரின் ஆயுதம் மற்றது ஒடுக்கப்படுவோரின் ஆயுதம் ஒடுக்குவோரின் பிற்போக்கான அதர்மான அடக்குமுறையான வன்முறையே பயங்கரவாதம் ஆகும் ஒடுக்கப்படுவோரின் முற்ப்போக்கான தர்மமான, விடுதலையை நோக்காக கொண்ட வன்முறையானது, பயங்கரவாதம் ஆகாது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான புரட்சிகர வன்முறை போராட்டம் ஆகும். வன்முறை என்பது முறண்பாட்டு நதியின் இருதுருவ எதிர்ச்சக்திக் கொண்டது. ஒன்று அழிவையும் மற்றது ஆக்கத்தையும் குறிப்பது இந்தப் பரிமானத்தில் வன்முறையானது, அடிப்படையான மனிதர் உரிமைகளை நிலைநாட்டும் நதியின் ஆயுதமாகிறது அடிமைத்தனத்தால். அவமானத்தால் அல்லல்படும் எமது மக்களின்
தன்மானத்திற்க்காக போராடும் நாம் பயங்கரவாதிகளா? அதர்மத்தையும் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்த்து போராடும் நாம் பயங்கரவாதிகள் அல்லர், ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் விடிவுக்காகப் போராடும் புரட்சி போராளிகள்.

அமெரிக்கா, ஸ்ரீலங்காவில் காலூன்ற கடும் பிராயத்தனம் செய்கிறது என்பதை நாமறிவோம். ஏனெனில், ஆசிய, பசிபிக் பிராந்தியத்தில், தனது ஆதிக்கத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இல்லையேல் அமெரிக்காவின் சரிவை, அமெரிக்கா நினைத்தாலும் சரிப்படுத்த முடியாது. காரணம் சீனாதான். இந்த நிலையில்,, ஸ்ரீலங்காவில், சீனாவின் ஊடுருவல், அசைக்கமுடியாத நிலையில் உள்ளது, காரணம், உள்ளகரீதியில், பல காரணங்கள் இருந்தாலும், ஸ்ரீலங்காவின், சீனா மீதான பிரிந்து செல்லமுடியாததான மென்போக்கும், புதிய அரசை விட்டுவைக்கவில்லை. ஆக, ஸ்ரீலங்காவின் சர்வதேச விசாரணைகளிலிருந்து, ஸ்ரீலங்காவை விடுவிக்க முயலவேண்டும், அதன்மூலம் ஒரு நம்பகத் தன்மையை இரு நாடுகளுக்கிடையிலும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.------
இனியும் நாம் பயந்து, பயந்து ஒழிந்து செத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. ஏதோ எங்கிருந்தோ எமக்குப் புறம்பான கைகோர்த்து உதவும் என்று காத்துக்கொண்டிருப்பது அசட்டைத்தனம்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழகத்தில் எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உயிர்களை கொடுத்துள்ளார்கள். தமிழீழத்தில் இலடச்சக்கணக்கான தமிழர்கள் உயிர்களை கொடுத்துவிட்டார்கள். தமிழா, நீ வீதியில் இறங்கிப் போராட இன்னும் எத்துனை திலீபன்களை பலி கேட்கப் போகிராய்???

தமிழ்நாட்டில் தெலுங்கன் தெலுங்கனாக..கன்னடன் கன்னடனாக..மலையாளி மலையாளியாக.. வாழ்கின்றனர்..
தமிழன் மட்டும் எங்குபோனாலும் அகதியாகவே வாழ்கின்றான்..
அடிமைப்பட்ட இனத்திற்கு உயிர்க்கொடையை விட ஆட்கள் தான் தேவைப்படுகிறது !! சமூக பிரச்சனைக்காக தொடர்ச்சியாக தமிழர்கள் தற்கொடை கொடுப்பதும் பெரும் வேதனை தருகிறது
இது போன்ற ஒரு வேதனையான முடிவுக்கு தமிழர்கள் தள்ளப்படுவதற்கு காரணம் இயலாமை தான்

இனஉணர்வு என்பது தமிழர்களின் ரத்தத்தில் இருக்கிறது. இனத்திற்கு பாதிப்பு வரும் பொழுது அது தானாக பீறிட்டு வெளி வரும். அதனை அடக்கி ஒரு இயலாமைக்குள் நகர்த்தும் பொழுது அந்த ஆன்மா உடலை விட்டு வெளியேறிவிடுகிறது. இவர்களை பார்த்து தான் இனவெறியன் என்று சொல்லுகிறார்கள். அழிக்க வேண்டிய எதிரிகள் நிறைய பேர் தமிழகதத்திலேயே இருக்கிறார்கள் நம்மை நாமே வருத்திக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. சாக போறோம்னு தெரிஞ்சா எதிரி பத்து பேரையாவது சாகடிச்சுட்டு சாவோம். இனிமேலும் இந்த தவறை நாம் செய்யாது இருப்பதே நலம். செய் அல்லது சாகடி என்ற புதிய வரலாற்றை எழுதுவதற்கு அணியமாவோம்.

இப்போது நாங்கள் விழிப்புடன் செயற்படத்தவறினால், இத்தனை ஆண்டு காலமாக நாம் செய்த தியாகங்கள், நாம் புரிந்த சாதனைகள், நாம் அனுபவித்த துன்ப துயரங்கள், நாம் கொடுத்த உயிர் விலைகள், பொருள் இழப்புக்கள் எல்லாமே அர்த்த மற்றவையாகப் போவதுடன், நாம் மீண்டும் அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட நேரிடும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபரன் அவர்கள்.

கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும். ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் சம்பந்தன், சுமந்திரன்,மாவை போன்றவர்களும், இந்திய வல்லாதிக்கமும் இன்றும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.

உரிமைகளும், விடுதலையும் கிட்டும் வரைக்கும் மானுடம் அனைத்து வழிகளிலும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக தொடர்ந்தும் எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்கும். இதுவே உயிரினங்களின் வாழ்வுக்கான போராட்டமாகவும் இருந்துவந்து கொண்டிருக்கிறது.

அடிமையாக இருப்பதை சுகமாக கருதுபவர்கள், அடிமைத்தனத்தின் ஒவ்வொரு கூறுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். சுதந்திரத்தை விரும்புபவர்கள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து தேவையானவற்றை எதிர்ப்பார்கள். குறிப்பாக அடிமைத்தனத்தை வளர்க்கும் எதேச்சதிகாரத்தின் அத்தனை கூறுகளையும் எதிர்ப்பார்கள். சுதந்திரம் ஒருபோதும் அடக்குமுறையளர்களால் சுயவிருப்பத்துடன் வழங்கப்படுவது இல்லை. அது ஒடுக்கப்படுபவர்களால் வலிந்து நிர்ப்பந்தத்தின் மூலம் பெறப்பட வேண்டும். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தோல்வி என்பது அந்த இனம் தொடர்ந்தும் போராடமல் இருக்கும் நிலையில் மட்டுமே ஏற்படுத்தப்படும். விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும். எங்கு வீழ்ந்தோமோ அங்கிருந்து எழுவோம். முடிந்துபோனவைகளில் இருந்து முன்னோக்கிச்செல்லும்... எம் தலைமுறைகள் போராடுவார்கள் ஏனெனில் காலம் மீண்டும் மீண்டும் ஒரே வரலாறுகளை அடிக்கடி பிரசவிக்கிறது…அடக்கப்படும் தமிழ் இனம் தங்களது உரிமைக்காக போராடுவதற்கு எவராலும் தடை போட முடியாது!
இலக்கு அடையும் வரை ஓய்வற்று உழைக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளையாகவுள்ளது.
....வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது...! மறுக்கப்பட்ட நீதிக்காக போராடுவோம்...காலமும் மாறும் காட்சிகளும் மாறும் ஆயுதங்களின் மெளனம் கலைக்கப்படும் விரைவினில் போர்களம் நோக்கி திரும்பும் நிலையினை வரலாறு அழைத்து நிற்கிறது.
– ஈழத்து நிலவன் –
« PREV
NEXT »

No comments