Latest News

September 29, 2016

இரட்டை கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது


by admin - 0

சொந்த சகோதரியையும் மச்சானையும் அடித்துக்கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை




நீர்வேலி பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

 
 

நீர்வேலி பகுதியில் கடந்த 2011ம ஆண்டு டிசம்பர் மாதம் 8ம திகதி கணவன் , மனைவி இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். அத்துடன் அவர்களது மகன் கொலை முயற்சியில் இருந்து படுகாயங்களுடன் தப்பிக் கொண்டார்.
 
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி  மா. இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


 
அதன் போது குற்றவாளியாக இனம் காணப்பட்ட எதிரிக்கு இரட்டை கொலைக்காக இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் கொலை முயற்சிக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் , ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் , வழங்க தவறின் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் , பத்தாயிரம் ரூபாய் தண்ட பணம் கட்ட வேண்டும் எனவும் , கட்ட தவறின் ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை எனவும் நீதிவான் தீர்ப்பளித்தார். 
 
இரட்டை கொலை.
 
நீர்வேலி பகுதியில் கடந்த 2011ம ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி இரவு 7.45 மணியளவில் கணவன் , மனைவியான , மார்க்கண்டு உதயகுமார் , உதயகுமார் வசந்தமாலா ஆகிய இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களது மகனான உதயகுமார் குகதீபன் என்பவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கப்பட்டு , படுகாயமடைந்து சிகிச்சையின் பின்னர் உயிர் தப்பி இருந்தார்.
 


குறித்த கொலையை செய்தவர் , கொலையுண்ட உதயகுமார் வசந்த மாலா என்பவரின் கூட பிறந்த சகோதரனான குணா என்று அழைக்கப்படும் , புவனேஸ்வரன் என்பவராவார்.
 
இந்த இரட்டை கொலை தொடர்பில் இரண்டு கண்கண்ட சாட்சியங்களாக இறந்தவர்களின் மகனான உதயகுமார் குகதீபன் மற்றும் மகளான உதயகுமார் கோபிகா என்பவர்கள் சாட்சியம் அளித்து இருந்தார்கள். 
 
அதில் இறந்தவர்களின் மகனான குகதீபன் பொலிசாரிடம் வாக்கு மூலம் கொடுத்ததுடன் , யாழ். நீதிவான் நீதிமன்றில் சாட்சியமும் அளித்திருந்தார். தற்போது உயிர் அச்சறுத்தல் காரணமாக கனடா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதால் இலங்கைக்கு மீண்டும் வர முடியாத நிலையில் உள்ளதால் மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கவில்லை.


 
இரண்டாவது சாட்சியமான இறந்தவர்களின் மகளான கோபிகா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி  கனடா நாட்டில் வசித்து வந்தாலும் இலங்கைக்கு வருகை தந்து  மேல் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.
 
கொலையுண்டவர்களின் மகளின் சாட்சியம்.
 
அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடும் போது , கொலை நடந்த தினத்தன்று நானும் எனது சகோதரனும் வீட்டில் இருந்தோம். அவ்வேளை இரவு 7.45 மணியளவில் வீட்டு கேற் பக்கமாக அம்மாவின் அவல குரல் கேட்டது.
 
அதனை அடுத்து எனது சகோதரன் கதவுக்கு போடும் மரசட்டகம் ஒன்றினை எடுத்துக்கொண்டு அம்மாவின் குரல் கேட்ட திசையை நோக்கி ஓடினார். நான் , மேசை மீதிருந்த கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு சில நிமிட இடைவெளியில் வெளியில் ஓடினேன்.
 
அவ்வேளை எனது சகோதரன் கொண்டு சென்ற மர சட்டகம் , எனது தாய் மாமனான குணா என்று அழைக்கப்படும் புவனேஸ்வரன் கைகளில் இருந்தது. அந்த மரசட்டகத்தால் எனது சகோதரனை தாக்கிக் கொண்டு இருந்தார். அருகில் எனது தகப்பனார் நெற்றியில் இரத்தம் பெருக நிலத்தில் வீழ்ந்து கிடந்தார். இவற்றை நான் பார்த்த போது என்னைக் கண்ட தாய் மாமன் என்னையும் மரசட்டகத்தால் அடிக்க துரத்திக் கொண்டு வந்தார். 

நான் அவரிடம் இருந்து தப்பி ஓடி அயல் வீட்டில் தஞ்சம் புகுந்தேன்.
 
பின்னர் அயலவர்களின் உதவியுடன் வந்த போது தாய்மாமன் தப்பி சென்று இருந்தார். நான் அயலவர்களின் உதவியுடன் , எனது தாய் தகப்பன் சகோதரனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தோம். அங்கு தாய் தகப்பனார் இறந்து விட்டனர். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

அயல் வீட்டாரான இராசையா என்பவரின் சாட்சியம். 
 
சம்பவம் நடந்த தினத்தன்று இரவு 8 மணியளவில் அயல் வீட்டாரான கோபிகா எமது வீட்டுக்கு அவல குரல் எழுப்பிய வாறே ஓடி வந்து சம்பவத்தை சொன்னார். அதனை அடுத்து நாம் அவர்களின் வீட்டை நோக்கி சென்ற போது வீட்டு கேற் க்கு அருகாமையில் , அயல் வீட்டாரான கணவன் மனைவி மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

 
 
அதனை நாம் வீட்டின் லைட் வெளிசத்திலும் வீட்டுக்கு முன்பாக உள்ள கடையில் பொருத்தப்பட்டு இருந்த லைட் வெளிச்சத்திலும் கண்ணுற்றோம். உடனேயே வாகனம் ஒன்றினை பிடித்து அவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம்.
 
நாம் அவர்களின் வீட்டுக்கு செல்லும் போது தாக்குதலாளி அங்கிருந்து தப்பி சென்று இருந்தார். என தெரிவித்தார்.
 
சட்ட வைத்திய அதிகாரியான வைத்திய கலாநிதி க.ரட்ணசிங்கம் தனது சாட்சியத்தில் , 
 
இறந்தவர்களின் உடலில் பல காயங்கள் இருந்தன. அதில் வசந்திமாலா என்பவரின் உடலில் பல காயங்கள் இருந்தன. இவர்கள் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் பலமாக தாக்கப்பட்டே மரணம் அடைந்துள்ளனர். என தெரிவித்தார்.

கொலையாளியை கைது செய்த கோப்பாய் பொலிஸ் அதிகாரியான அரம்போல என்பவரின் சாட்சியத்தில் , 
 
கொலையாளியை கொலை நடந்து 14 நாட்களுக்கு பின்னரே கைது செய்தோம். அதுவரை எதிரி தலைமறைவாக இருந்தார். எதிரி மீது மக்களுக்கும் பயம் இருந்த காரணத்தால் அவர் பற்றிய தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில் முருகையா என்பவரின் வீட்டில் , பதுங்கி இருந்த வேளை 22ம் திகதி டிசம்பர் மாதம் 2011ம ஆண்டு இரவு எட்டு மணியளவில் கைது செய்தோம்.
 
புலனாய்வு தகவலின் பிரகாரம் அன்றைய தினம் இரவு எட்டு மணியளவில் வீட்டை சுற்றி வளைத்து வீட்டுக்குள் சென்று அங்கு பூட்டிய அறை ஒன்றினை திறந்த போது கட்டிலில் படுத்து இருந்த நிலையில் எதிரி கைது செய்யபப்ட்டார்.
 


எதிரியின் வாக்கு மூலத்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து பெறும் போது தாக்கிய கோடரி வாழை தோட்டத்திற்குள் இருக்கின்றது என கூறி எம்மை அங்கு அழைத்து சென்று அங்கிருந்து தப்பியோடினார். தப்பியோடி 15 நிமிடத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார். என சாட்சியம் அளித்தார்.
 
அதன் போது எதிரி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறுக்கு விசாரணையின் போது  பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலையா கைது செய்தீர்கள் என கேட்ட போது , அதற்கு பதிளித்த பொலிஸ் அதிகாரி பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்தது பின்னர் புலன் விசாரணைகளை முன்னெடுத்தே கைது செய்தோம் என பதில் அளித்து, குறுக்கு விசாரணையை முறியடித்தார்.
 


எதிரியின் சாட்டியம்  , 
 
எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை. நான் கொலை நடந்த காலத்தில் கொழும்பில் தங்கி இருந்தேன். கொலை நடந்த பின்னர் மீண்டும் நீர்வேலி பகுதிக்கு வந்த போது என் நண்பர்கள் , ஏன் இப்படி செய்தாய் என கேட்டார்கள். அதன் பின்னரே , எனக்கு கொலை நடந்த விடயமும் ,கொலைக்கு நான் தான் காரணம் என சொல்லப்படும் விடயத்தையும் அறிந்தேன்.
 
அதனை அடுத்து கோப்பாய் பொலிசிடம் சென்று எனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என கூற நினைத்து, முருகையா வீட்டில் தங்கி இருந்த வேளையே கோப்பாய் பொலிசார் என்னை கைது செய்தனர். என மன்றில் தெரிவித்தார்.

எதிரியின் சாட்டியத்தை ஏற்க மறுத்த நீதிபதி.
 
எதிரி எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என கூறுகின்றார். ஆனால் இறந்தது அவரது கூட பிறந்த சகோதரி , மற்றையது சகோதரியின் கணவனும் எதிரியின் மச்சானும் , கொலை முயற்சியில் இருந்து  தப்பி படுகாயமடைந்து  வைத்திய சாலையில் இருந்தது எதிரியின் சகோதரியின் மகனும் எதிரியின் மருமகனும் , இவ்வளவு நடந்த பின்னர் எதிரிக்கு 14 நாட்களாக எதுவும் தெரியாது கொழும்பில் இருந்தார் என்பது நம்பும் வகையில் இல்லை. இது நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் முயற்சி என அவரது சாட்சியத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.
 
சாட்சியம் எத்தனை தேவை?
 
சாட்சியம் எத்தனை தேவை எனும் கேள்விக்கு எத்தனை சாட்சியம் தேவை என்று இல்லை. நம்பகமான சாட்சியம் ஒன்று இருந்தாலும் போதும். 
 
கொலைகள் நடக்கும் போது கொலையாளிகள் சாட்சியங்களை வைத்துக்கொண்டு செய்வதில்லை. எல்லோரும் தாம் புத்திசாலிகளாக செயற்பட்டு கொலை செய்கின்றோம் எனும் நினைப்பிலையே கொலை செய்கிறார்கள்.
 
தண்டனை.
 
இந்த வழக்கின் எதிரியான குணா என்று அழைக்கப்படும் புவனேஸ்வரனை மேல் நீதிமன்ற நீதவான் மா.இளஞ்செழியன் குற்றவாளியாக கண்டு , இரண்டு கொலை குற்றத்திற்காக இரண்டு மரண தண்டனை விதி
« PREV
NEXT »

No comments