Latest News

September 13, 2016

யாழின் பெருமை மிக்க இளைஞர்கள்
by admin - 0

எத்தனை இடர்கள் வந்தாலும் தமிழன் தமிழனாகவே வாழ்வான் ஒழுக்கத்திற்கு பெயர் போன யாழில் அதன் புகழ் மங்காமல் பாதுகாப்பது யாழ் இளைய சமூதாயமே

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்ற பாரதியின் பாடலுக்கேற்ப பல வீர வேங்கைகளை பெற்ற யாழ் மண் பல நல்லொழுக்கம் கொண்ட இளைஞர்களையும் ஈன்ற மண் அதை பறை சாற்றும் நிகழ்வே இது ....

யாழில் இப்படியும் இளைஞர்கள்

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுதினமான நேற்று (11.09.2016) யாழ்ப்பாணம், நல்லூரிலே அமைந்திருக்கும் பாரதியார் சிலையானது இளைஞர்களால் சிறப்பாக சுத்திகரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு சுட்டி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வால் தூண்டப்பட்டு விசாரித்த போது அவ் இளைஞர்களின் சமூகப் பற்று மெய்சிலிர்க்க வைத்தது.

பாரதியார் உருவம் பொறிக்கப்பட்ட மேலாடைகளுடன் தனி நபர்களாக முன்னின்று பாரதியாரை நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நினைவாக இலவசமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார்கள்.



ஒரு புறம் விஜய், அஜித்துக்கு பாலூற்றும் இளைஞர்கள் மத்தியில், இவ்வாறான நடவடிக்கைகளில் இக்கால இளைய தலைமுறையினர் ஈடுபடுபது தமிழின் பெருமையாலன்றி வேறொன்றுமில்லை.
« PREV
NEXT »

No comments