Latest News

September 04, 2016

60- வது படம் பைரவா.... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்
by விவசாயி செய்திகள் - 0

60- வது படம் பைரவா.... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய் #bairava




சென்னை: நடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார்.

விஜய்யின் 60-வது படத்தின் தலைப்பு குறித்து ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் ரெக்கை கட்டி பறந்தன. பரதனின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கான தலைப்பு தளபதி-60, விஜய்-60, தளபதி என்றெல்லாம் கூறப்பட்டன.

இந்த படத்துக்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சமூக வலைதளங்களில் விஜய்யின் படம் பைரவா என்று கசிந்தது. பர்ஸ்ட் லுக் படங்களும் கூட வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் நடிகர் விஜய் தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய படத்தின் பெயர் பைரவா என்பதை அறிவித்து போஸ்டர்களையும் ரிலீஸ் செய்திருக்கிறார்.

'பைரவா'வை இப்போதே பல்லாயிரக்கணக்கில் ஷேர் செய்து கொண்டாடி மகிழ்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

« PREV
NEXT »

No comments