Latest News

September 29, 2016

17 ஆண்டுகள் கழித்து எல்லை தாண்டி பாக். தீவிரவாதிகளை கூண்டோடு அழித்த இந்தியா
by admin - 0

டெல்லி: கார்கிலை அடுத்து யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை துணிச்சலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
 

கடந்த 18ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.

தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டோரம் பாகிஸ்தான் பகுதியில் இந்தியாவை தாக்க தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதை உளவுத் துறை கண்டறிந்து கூறியது.

இதையடுத்து புதன்கிழமை இரவு இந்திய விமானப்படை விமானங்கள் துணிந்து எல்லையை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டு மழை வீசித் தாக்குதல் நடத்தின.

இதில் முகாம்களில் இருந்த தீவிரவாதிகள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் இது போன்ற அதிரடி தாக்குதல்கள் தொடரும் என ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து வாலாட்டியது. அதை பார்த்த இந்திய ராணுவம் அவர்களை விரட்டியதுடன் பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியது.

17 ஆண்டுகள் கழித்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments