Latest News

September 12, 2016

பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிக்கப்பட்டுள்ளது
by admin - 0

தமிழ் இளையோர்கள், பொதுமக்கள், செயற்படடாளர்கள் , இவர்களுடன்    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலத்திற்கான துனை அமைச்சர் மதிப்புக்குரிய திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களும் 09,09,2016 அன்று மனு ஒன்றை பிரித்தானிய பிரதமர் இல்லத்தில்  கையளித்தார்கள் மனுவில், குறிப்பிடப் பட்டுள்ளதாவது.


கடந்த காலங்களில் பல தசாப்தகாலமாக தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல்த் தீர்வு என்ற மாயைக்குள் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வந்துள்ளார்கள் அத்துடன் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி புனர்வாழ்வு மையம் என அமைத்து அங்கு முந்நாள் தமிழீழ விடுதலைப் புலிகளை வதைத்தது மட்டுமல்லாது நச்சுவகை உணவை கொடுத்து குறுகிய காலத்தில் அவர்கள் உடல் வலிமை இழந்து இறப்பது தொடர்கிறது. இதுவரை 105 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் மரணம் அடைந்துள்ளார்கள் இது மேலும் நடைபெறாமல் இருக்க சர்வதேச சுயாதீன விசாரணை கோருகின்றோம்.


ஒரு இனத்து மக்கள் தமது இறையாண்மையை தக்கவைத்து அதனை தமது எதிர் காலச் சந்ததிக்கு விட்டுச் செல்வது அந்த மக்களின் அடிப்படை உரிமை.
இலங்கை தேசத்தில் மட்டும் தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப் படுகின்றார்கள், எமது பரம்பரிய அடையாளங்கள் திட்டமிட்டுச் சிதைக்கப் படுவதுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் ஒன்றை எமது இனத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் கடந்தும் எமக்கு எந்தவெரு தீர்வுமின்றி, 18 May, 2009 ல்  ஒரு லச்சத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்ட பின்னரும் அந்த யுத்தக் குற்றம் புரிந்தவர்களால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் எமக்கு எந்த நீதியோ, தீர்வோ தரப்போவதில்லை.

பாதிக்கப்பபட்ட மக்கள் நாம் சர்வதேச சுயாதீனமான விசாரணையைக் கோரினோம்! எமக்குக் கிடைத்தது கலப்பு நீதிப் பொறிமுறை ஊடாக ஒரு விசாரணை நடைபெறும் என்று.

தற்பொழுது இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் நடந்தால்,, எமது கோரிக்கைக்கு ஜ, நா சபையில் 15 October,2015 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாம் தொடர்ந்தும் அழிக்கப் படுவோம்.

என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனுவை இளையோர்கள்,  செயற்பாபாட்டாளர்கள்  பொதுமக்கள், ஆதரவுடன் இந்தக் கோரிக்கைகளை கையளித்தனார்.

அத்துடன் இரண்டு கிழமைக்கு முன்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பிரதமர் வாசஸ்தளம் முன் மேற்கொண்டமையும் அதன்பின் மனு ஒன்றையும் பிரதமர் காரியாலயத்தில் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.







« PREV
NEXT »

No comments