Latest News

August 16, 2016

காலையில் முதல் வேலையா முத்துக்குமாருக்கு போன் செய்யணும்னு இருந்தேனே: பார்த்திபன்
by admin - 0

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வேளையாக நா. முத்துக்குமாருக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்து உறங்கிய எனக்கு அவரின் மரணச் செய்தி பேரதிர்ச்சியை அளித்தது என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கவிஞரும், பாடல் ஆசிரியருமான நா. முத்துக்குமார் 41 வயதில் மரணம் அடைந்ததை திரையுலகினரால் இன்னும் நம்ப முடியவில்லை. கமல் ஹாஸனோ தன் உடல் நலத்தை பேணாததற்காக முத்துக்குமார் மீது கோபம் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் முத்துக்குமார் பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
  • வேதனையே 

    ஒரு பாதி கதவை மட்டுமே திறந்து வாழ்வை பார்த்த நல்முத்து குமார் மறுபாதிக்குள் நம்மை கண்ணீர் சிந்த விட்டு மறைந்தது வேதனையே! சென்ற மாதம் ' எனக்கு எப்ப ட்யூன் அனுப்புறீங்க ? நான் எழுதுறேனில்லே உங்க படத்திலே?' என்று உரிமையாய் கேட்டார்.
  • முத்துக்குமார் 

    இன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து படுக்க செல்கையில் உறங்கி எழுந்ததும் பாடலின் சூழலை அவரிடம் சொல்லி எழுத சொல்ல வேண்டும் என நினைத்தபடியே Na. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி.
  • கவிஞர் 

    Na. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கு அவருடைய எண்ணே இல்லை. அதெப்படி? நாங்கள் தான் அடிக்கடி பேசுவோமே என்று குழம்பியபடி மீண்டும் தேடினேன். Kavingar na. Muthukumar என்ற contact-டில் அவர் எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்'not reachable' என்றது.
  • சாகாவரம் பெற்ற கவிஞன் 

    சற்று நேரங்கழித்து முயல முடிவு செய்து வந்துள்ள what's app செய்திகளை படித்தேன். நண்பர் சுரேஷ் சந்திரா அனுப்பிய மரணச் செய்தியில் மவுனித்தேன். நண்பனை இழந்த வருத்தத்தை பாதியாக குறைத்துக் கொள்ள காரணம். சாகாவரம் பெற்ற கவிஞனாக அவரின் எழுத்தும், வரிகளும், படைப்புகளும் நம்மிடம் இருப்பது.
« PREV
NEXT »

No comments