Latest News

August 01, 2016

மஹிந்த ஆட்சியில் ஈ.பி.டிபி. யின் அடாவடியால் வீட்டுத்திட்டம் மறுக்கப்பட்ட சிவபுரம் கிராமத்திற்கு வீட்டுத்திட்டம்
by admin - 0

மஹிந்த ஆட்சியில் ஈ.பி.டிபி. யின் அடாவடியால் வீட்டுத்திட்டம் மறுக்கப்பட்ட சிவபுரம் கிராமத்திற்கு வீட்டுத்திட்டம்!

மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களோடு சேர்ந்து வடபகுதியில் கூட்டாட்சி நடத்திய ஈ.பி.டி.பி. யினரது அடாவடிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்கள் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உட்பட்ட பலவற்றில் திட்டமிட்ட வகையில் புறக்கணித்து ஒதுக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரந்தன் சிவபுரம் கிராமம் கிராம அபிவிருத்தித் திட்டங்கள், மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படாது அபிவிருத்தியில் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டே காணப்பட்டது. இக்கிராம்தில் 316 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் இக்கிராமத்து மக்கள் போக்கு வரத்துச் செய்யும் ஒரு வீதிகூட இதுவரை திருத்தியமைக்கப்படாத நிலையில் மிகவும் மோசமாகப் பழுதடைந்து போக்கு வரத்துச் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.
மஹிந்த ஆட்சியின் பங்காளிகளான ஈ.பி.டி.பி. யினரது அடாவடிகளால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்த சிவபுரம் கிராம மக்களுக்கும், ஆட்சி மாறி ஈ.பி.டி.பி. யின் அடாவடிக்காரர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் முதன்முதலாக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வீடு கட்டும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த கால மஹிந்த ஆட்சியின் கூட்டாளிகளான ஈ.பி.டி.பி. யினரது அடாவடிகளால் சிவபுரம் கிராமத்திற்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட கிராமிய அபிவிருத்தித்திட்டங்கள் எதுவும் வழங்கப்படாதமைக்குக் காரணமாக சிவபுரம் கிராமம் ஒரு மாவீரர் கிராமமாகக் காணப்பட்டமையே பிரதான காரணமாகக் காணப்பட்டுள்ளது. 316 குடும்பங்களுக்கு மேற்பட்ட பெருமளவான மக்கள் சிவபுரம் கிராமத்தில் வாழ்கின்றபோதிலும் இக்கிராம மக்களது கோரிக்கைகளின்படி சிவபுரம் கிராமத்திற்கென்றொரு தனியான கிராம அபிவிருத்திச் சங்கத்தை அமைப்பதற்குக்கூட பொறுப்புவாய்ந்த அதிகாரிகளால் இதுவரை அனுமதி மறுக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

கடந்தகாலங்களில் மஹிந்த ராஜபக்ச கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு வருகைதந்த வேளைகளில் ஈ.பி.டி.பி. யினராலும் சில அரச உத்தியோகத்தர்களாலும் இக்கிராம மக்களுக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட கிராம அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதியிடம் பெற்றுத் தரலாம் என்று கூறி மக்களை ஏமாற்றி வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ச அரசினாலும் அவரின் ஆட்சியின் பங்காளிகளான ஈ.பி.டி.பி. யினராலும் கிளிநொச்சியில் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் வழங்கப்படாது திட்டமிட்ட வகையில் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த சிவபுரம் கிராமத்திற்கு ஆட்சி மாறியதன் பின்னர் தற்போது முதன் முதலாக வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments