Latest News

August 25, 2016

அப்பன் தேவிகன் பிடிபட்டது எப்படி? தளபதிகள் போராளிகளின் கவனத்திற்கு...
by admin - 0



எமது முகப்புத்தகத்தில் இருக்கும் சில தளபதிகள் போராளிகளின் கவனத்திற்கு........!

என்னவென்றால் அன்மைக்காலங்கலாக மலேசிய சிங்கபூர் மற்றும் சில மத்திய கிழக்கு  நாடுகளில் இருந்து எமது முக்கியமான மூன்று தளபதிகள் மற்றும் போராளிகளை சிங்கள புலனாய்வுத்துறை கைதுசெய்தது  மலேசியாவில் கைதாகிய மூன்று தளபதிகளை பற்றி மலேசியா கூறியதை கொஞ்சம் பாருங்கள். 

(விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்ப்ப்படுவார்கள் என்றும், இது குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.)

ஐரோப்பிய நாடுகளில் இருந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த சில தளபதிகளுக்கு அவர்கள் எப்படி மாட்டினார்கள் என்பது இது வரை தெரியாது.  

இது ஒரு புறம் இருக்க மற்றுமொரு செய்தி தாயகத்தில் இருந்து வந்த செய்தி கோபி மற்றும் தேவியன் பற்றிய செய்தி இலங்கை இராணுவத்தால் வெளியிட்ட செய்தி. 

( நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை 

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் தப்பிச் செல்ல முற்பட்ட போது   இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். 

சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த மற்றைய நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை .

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும் நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி தேடுதல் மேற்கொண்டுவந்தனர்.  

கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கோபி சுட்டு கொலை செய்யப்ப்டதாக இராணுவத்தினர் தெரிவித்திருப்பதினால் இது வரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு கொண்டுவரப்படலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.)

புலம்பெயர் தேசத்தில் இருந்து இவை எல்லாம் ஏற்பாடு செய்தவர்களுக்கு எப்படி இவர்கள் மாட்டினார்கள் என்று இது வரை தெரியாது. மற்றும் சாவகச்சேரி பிரச்சினையும் இப்படி தான் எப்படி மாட்டினார்கள் என்று இது வரை தெரியாது. 

தளபதிகளே இதைப்போன்று ஏற்பாடு செய்யும் போராளிகளே சில காலங்களாக சிங்கள அரசுடன் கைகோர்த்து நிற்கும் சிம் காட் உரிமையாளர்களை நீங்கள் அறிந்திருப்பிர்கள் நீங்கள் அப்படி பட்ட வேளைகளில் வைத்து பயன்படுத்திய சிம்காட் எது என்று பாருங்கள் எல்லாவற்றுக்கும் அந்த சிம்காட் தான் கரணமாக இருக்கும் என எனது சின்ன சந்தேகம் இனி நீங்கள் புரிந்துகொண்டிருப்பிர்கள் என நினைக்கின்றேன்.   

நன்றி

யாழ்காந் தமிழீழம்.
« PREV
NEXT »

No comments