லண்டனில் தமிழர்கள் மிகவும் பெருமிதத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில தமிழர்கள் செய்யும் செயல் ஒட்டு மொத்த தமிழர்களையும் தலை குனிவுக்கு உள்ளாகி விடுகிறது. லண்டனுக்கு வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரியுள்ளார் சிவராசா சுகந்தன் என்னும் 31 வயது நபர். இவரது அகதிகள் அந்தஸ்த்து கோரிக்கை நிராகரிக்கபப்ட்ட நிலையில், அவரை நாட்டை விட்டு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முடிவு செய்தது. இன் நிலையில் இவருக்கு உதவ லிபரல் கட்சி MP ஸ்டீபன் முன்வந்தார். அவர் தொடர்சியாக பல உதவிகளைச் செய்ய. அத்தோடு சுகந்தன் தடுப்பு காவலில் இருந்தவேளை வெளியே பல போராட்டங்களை பிரிஸ்டல் வாழ் மக்கள் நடத்தி அவருக்கு ஆதரவு சேகரித்தார்கள். இதனால் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் அவரை நாடு கடத்தாமல் விட்டார்கள்.
பின்னர் அவருக்கு அகதிகள் அந்தஸ்த்தை கொடுக்க முடிவெடுத்து அவரை வெளியே விட்டார்கள். வெளியே வந்த சுகந்தன் தனது லீலையை காட்டியுள்ளார். அவர் ஒரு பெண்ணை கற்பழித்துள்ளார். குறித்த பெண் பொலிசாரிடம் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து சுகந்தனை பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சுகந்தனுக்கு நீதிபதி 21 வருட சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பழித்துள்ளார். நீதிமன்றில் சுகந்தனுக்காக வாதாடிய வக்கீல், சுகந்தன் அப்பெண்ணை கற்பழிக்கவில்லை என்றும். அவரது அந்தரங்க உறுப்பில் , அவர் இணக்கத்திற்கு மாறாக கைகளால் தொட்டார் என்றும் வாதாடியுள்ளார்.
இருப்பினும் நீதிபதி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர்களை திருப்பி அனுப்ப கூடாது என்று பிரித்தானியாவில் பல, MP க்கள் போராடி வருகிறார்கள். இவர்கள் வெக்கப்படும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. இதுபோக சுகந்தனுக்காக போராட்டம் நடத்திய வேற்றின மக்கள் தாம் ஏன் இதற்காக போராடினோம் என்றும் நினைக்கும் அளவு நிலமை உள்ளது.
THANK ATHIRVU


No comments
Post a Comment