Latest News

July 27, 2016

புலிகள் விமானம் என்று நினைத்து இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதா இலங்கை கடல்படை ?
by admin - 0

சமீபத்தில் சென்னை தாம்பரம் ஊடாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் நோக்கி பறந்த இந்திய படையின் விமானம் திடீரென ராடர் திரையில் இருந்து மறைந்துள்ளது. விமானம் புறப்பட்டு சுமார் 16 நிமிடங்களில் இது நடந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நடக்கு முன்னர், விமானி எந்த ஒரு அவரச அறிக்கை , இல்லை தகவலை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வழங்கவில்லை. இன் நிலையில் தான் இந்திய விமானம் திடீரென காணாமல் போயுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கடல்படையினர். தற்போது இந்த விசாரணையை இந்திய புலனாய்வு துறையினரிடம் கையளித்துள்ளார்கள் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

வெளிநாடுகளில் வேவுபார்க்கும் இந்திய உளவுத்துறையினர், விமானம் எப்படி வீழ்ந்தது என்று ஆராய்கின்ற அதேவேளை. இந்திய கடல்படை மற்றும் வான் படையினர் குறித்த விமானத்தை தேடியும் வருகிறார்கள். விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படாமைக்கு , ராணுவத் தரப்பினர் வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். விமானம் வானில் வெடித்துச் சிதறி துண்டுகளாக கடலில் வீழ்ந்திருந்தால், அவை மிதக்க சந்தர்ப்பம் இல்லை என்கிறார்கள் அவர்கள். அப்படி என்றால் விமானம் நடு வானில் ஏன் வெடித்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?

தற்போது உள்ள இலங்கை அரசு, 2009ம் ஆண்டுக்குப் பின்னர் புலிகள் அல்லது புலிகளைப் போன்ற அமைப்பு ஒன்று வேறு நாட்டில் உருவாகி. அவர்கள் விமானம் மூலம் வந்து தாக்கிவிட்டு செல்லக் கூடும் என்ற அச்சத்தோடு இருந்து வருவது பல தடவைகள் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போதைய மைத்திரி அரசு கடல் எல்லையை இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு. எல்லைப் புறங்களில் இன்றும் வான் எதிர்ப்பு பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது மண்டை தீவு, உட்பட பல மினி முகாம்களில் இன்று கூட காணப்படுகிறது. அத்தோடு அவர்கள் கச்ச தீவில் ராடர் ஒன்றையும் பொருத்தியுள்ளார்கள்.

இந்திய விமானம் இலங்கையை அடுத்துள்ள, பெங்கோல் கடல்கரை ஊடாகவே அந்தமான் தீவை அடைய முடியும். இதில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடல்படையினர் , இந்திய விமானத்தை தாக்கியிருக்க கூடும் என்று தற்போது சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன் நிலையில் இந்திய உளவுத்துறையும், இது பிறிதொரு நாட்டின் தாக்குதலாக இருகலாமோ என்ற கோணத்தில் தான் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக , பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


கணவரை மீட்க மனைவி மனு: மாயமான விமானத்தில் இருந்த கணவரை கண்டுபிடித்து தரும்படி, முதல்வர் தனிப்பிரிவில் மனைவி மனு கொடுத்துள்ளார்.சென்னை, கே.கே.நகரை சேர்ந்த ஜெயசுமித்ரா கொடுத்துள்ள மனு: என் கணவர் முத்துகிருஷ்ணன், 18 ஆண்டுகளாக, கடலோரக் காவல் படை



மாலுமியாக பணியாற்றி வருகிறார். கடந்த, 22ம் தேதி, சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற, ஏ.என்.32 ரக விமானம் மாயமானது.

என் கணவர், அந்த விமானத்தில் பயணித்தார். தற்போது, விமானம் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. எனக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். ஆறு வயதான என் மூத்த மகன், மனவளர்ச்சி குன்றியவனாக உள்ளான். 

என் தாய் மற்றும் தந்தை வயதானவர்கள். என் கணவரின் தந்தை காலமாகி விட்டார். 80 வயது மாமியார், உடல்நலக் குறைவுடன் இருக்கிறார். இதனால், எனக்கும் என் குழந்தைகளுக்கும் எவ்வித ஆதரவும் இல்லை. எனவே, என் கணவரை கண்டுபிடித்து தர, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments