Latest News

July 05, 2016

சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை: சென்னையில் வக்கீல் பரபரப்பு பேட்டி
by admin - 0

சுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பமாக இந்த கொலைக்கும் கைதாகியுள்ள ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராம்குமாரின் வக்கீல் இன்று தெரிவித்துள்ளார்.

சுமார் பத்து நாட்கள் தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உடல்நலம் தேறியதும், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அவரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், ராம்குமாரை ஜூலை 18ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், சுவாதியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலையாளி ராம்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்குமார் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி சுவாதியின் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராம்குமார் கூறுவதாகவும், போலீசார் கூறுவதுபோல் கழுத்தை அறுத்துக்கொண்டு ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக போலீசாருடன் சென்ற நபர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தனர் என்று புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
« PREV
NEXT »

No comments