Latest News

July 28, 2016

பிரிட்டனில் குடியேற காலக்கெடு நிர்ணயம்
by admin - 0

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரட்டனுக்குள் குடியேற வருவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பிரிட்டன் உள்ள நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் பிரட்டனில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்று அந்த குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

பிரட்டன் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவிலிருந்து விலகுவதற்கு முன்னதாக அங்கு வந்தடைய பெருமளவில் மக்கள் படையெடுப்பர் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
« PREV
NEXT »

No comments