Latest News

June 17, 2016

30 வருட சிறைத் தண்டனை விதித்த கடற்புலித் தளபதிக்கு கனடா புகலிடம்
by admin - 0

இலங்கைக்கு ஆயும் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய மூன்று கப்பல்களை எடுத்து வந்தமை தொடர்பில் 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் பிரதானி சங்கிலி என அழைக்கப்படும் ரவி சங்கர் கணகராஜா என்பவருக்கு கனடா அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நீதிமன்றத்தினால் இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச பொலிஸாரும் இவருக்கு சிவப்புப் பிடியாணை விதித்திருந்த போதிலும் கனேடியப் பொலிஸார் அதனைப் பொருட்படுத்தாது இருந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட கணகராஜாவை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கைப் பொலிஸின் சர்வதேச பிரிவு கனடா அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கே.பி அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்ட தலைமைச் செயலகம் என்ற கட்டமைப்பின் கடற்புலிப் பிரிவுக்கு பொறுப்பாளராள நியமிக்கப்பட்டிருந்தார்.

கேபி அவர்களின் சரணடைவுக்குப் பின்னர், கேபி அவர்களால் போராளிகளுக்கு விளப்படுத்தப்பட்ட சரணடைவு நிகழ்ச்சி நிரல் சதித்திட்டத்தை விளக்கிச் சுதாகரித்துக்கொண்ட இவர் தொடர்புகளைத் துண்டித்து தலைமறைவானதை அடுத்தே சங்கிலியனுக்கு அனைத்துலக காவல்துறை ஊடான சிவப்பு அடையாள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
« PREV
NEXT »

No comments