Latest News

May 31, 2016

மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம்
by kavin - 0

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணண பாடசாலைகளக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்ற மாபெரும் கூடைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் 01.06.2016புதன்கிழமை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தலைவர் கே.முத்துக்குமார் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியககல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எம் .தமிழ்அழகன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்

கூடைப்பந்தாட்ட சுற்றுக்போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் பெண்கள் பிரிவில் வேம்படிமகளீர் கல்லூரியும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments