Latest News

March 08, 2016

மீண்டும் புலிகள் தாக்குவார்கள் பீதியில் சிங்கள இராணுவம்?
by admin - 0

புலிகளை அழித்துவிட்டோம் என கூறிய இராணுவம் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது அதாவது முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன்கட்டுப் பகுதிகளில் உள்ள பற்றாலியன் பயிற்சிப் பாடசாலைகளில் இந்த சிறப்பு போர்ப்பயிற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இப்படியான பயிற்சிகள் மக்களை பீதியில் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படுறதா? இல்லை மீண்டும் புலிகள் பயமா? என்பதே கேள்வி 

முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள டிவிசன்கள், பிரிகேட்கள், முன்னரங்க பாதுகாப்பு பிரதேசம், மற்றும் பற்றாலியன்களில் பணியாற்றும் படையினருக்கே இந்த சிறப்பு போர்ப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

68ஆவது டிவிசன் படையணியின் கீழ் உள்ள 7ஆவது கெமுனுவோச் படைப்பிரிவுக்கான பயிற்சி புதுக்குடியிருப்பு பற்றாலியன் பயிற்சிப்பாடசாலையில் இடம்பெறுகிறது. இங்கு 9 அதிகாரிகள் மற்றும் 352 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் 15ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள் அடுத்த மாதம் 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் இலங்கை இராணுவம் தற்பொழுது பயிற்சிகளை அடிக்கடி வடபகுதிகளில் மேற்கொண்டுவருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இது வழமையான நடவடிக்கை தான் என இராணுவத்தினர் கருத்துரைத்துள்ளனர்.

அதுபோல, 64ஆவது டிவிசனின் கீழ் உள்ள 14ஆவது சிங்க ரெஜிமென்டுக்கு, முத்தையன்கட்டு பற்றாலியன் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 11 அதிகாரிகள் மற்றும் 222 படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சிறப்புப் பயிற்சிகளின் போது, சிறிலங்கா படையினருக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. போரற்ற சூழ்நிலையிலும் சிறிலங்கா படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவே சிறிலங்கா இராணுவம் அவர்களுக்கான முழு அளவிலான பயிற்சிகளை மீள ஆரம்பித்துள்ளது.

« PREV
NEXT »

No comments