Latest News

October 06, 2015

தீர்மானம் அமுல்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கை விஜயம்
by Unknown - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கும் நோக்கில் இந்தக் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.

இந்தக்குழுக்கள் தீர்மானத்தில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்த துறைகள் குறித்தும் கண்காணிக்க உள்ளனர்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகள் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments