Latest News

October 01, 2015

ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியினை ஐ.நாவின் தீர்மானம் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கவில்லை -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
by Unknown - 0

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஈழத்தமிழ் மக்களுக்கு நீதியினைத் பெற்றுத்தருமென நாம் எதிர்பார்க்கவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜெனீவாவில் கருத்து தெரிவித்துள்ள நாடுகடந் தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், எமக்கான பரிகாரநீதியினை நீதிக்கான அனைத்துலக பொறிமுறையொன்றின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதே இதற்கான சிறந்த வழிமுறையென்றும், இதனை நோக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் 14 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பமிட்டு அங்கீகாரத்தினையும் ஆணையினையும் வழங்கியுள்ளார்கள்.

தமிழீழத் தாயகத்தில் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பமிட்டிருநத்தோடு, புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் என உலகப்பரப்பெங்கும் மில்லியன் மக்களின் ஒப்பங்கள் இழைக்கப்பட்ட அநீக்கு பரிகாரநீதியினைக் கோரி நிற்கின்றார்கள்.

இந்நிலையில் மில்லியன் மக்களின் நீதிக்கான கோரிக்கையினை புறந்தள்ளிவிட்டு, குற்றத்துக்குரியவர்களின் நலன்களின் அடிப்படையில் வரையப்பட்டுள்ள இத்தீர்மானத்தின் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றாற் போல் நாம் செயற்படமுடியாது. எமக்கான பரிகாரநீதியினை பெற்றெடுப்பதற்கான எமது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நீதிக்கான போராட்டம் ஜெனீவாவையும் கடந்து தொடரும் என தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments