Latest News

October 26, 2015

உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி
by Unknown - 0

உலகக் கிண்ண றக்பி வரலாற்றில் 4 ஆவது தடவைாயகவும் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட ஆர்ஜன்டினா தோல்வியை தழுவியது.

லண்டன் ட்விகன்ஹாமில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியை கண்டுகளிப்பதற்காக 80,000 இற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர்.

போட்டியின் 2 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டின வீரர் ஒருவரின் தவறான பந்து பறிமாறலை பயன்படுத்திக்கொண்ட அவுஸ்திரேலியாவின் ரொப் சிமன்ஸ், ட்றை ஒன்றின் மூலம் முதலாவது புள்ளியை அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.

மேலும் 8 நிமிடங்கள் கடந்த போது, அவுஸ்திரேலியாவின் அஸ்லி கூப்பர் இரண்டாவது ட்றையை பதிவு செய்தார்,

போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய அஸ்லி கூப்பர் ட்றையொன்றை நிறைவேற்ற போட்டியின் முதல் பாதியில் 19 இக்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலைப் பெற்றது.

சென்டர் வீரர் அஸ்லி கூப்பர் அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிபடுத்தும் வகையில் 72 ஆவது நிமிடத்தில் மூன்றாவது ட்றையை நிறைவேற்றினார்.

உலகக்க கிண்ண றக்பி வரலாற்றில் அவர் மூன்று ட்றைகளை நிறைவேற்றிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

29 இக்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் அரை இறுதியில் வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் உலகக் கிண்ண றக்பி வரலாற்றில் முதற் தடவையாக இறுதிப் போட்டியொன்றில் பலபரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments