Latest News

October 26, 2015

தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறாரா கருணா!
by Unknown - 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து தமது அரசியல்நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும்விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே தாம் இந்த தீர்மானத்தைஎடுத்துள்ளதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டமைக்கு அண்மையில் எதிர்ப்புத் தெரிவித்த கருணா, பிள்ளையானை காக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவறிவிட்டதெனவும், கிழக்கில் சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு பிள்ளையானின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டதாகவும் தெரிவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் போராளியாக செயற்பட்ட கருணா, கடந்த 2004ஆம் ஆண்டு அவ் அமைப்பிலிருந்து விலகி தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை ஆரம்பித்து இலங்கைஅரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வந்தார்.

பின்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்ட கருணா, கடந்த 2008ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதோடு பின்னர் அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டார்.

அதனையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்நடவடிக்கையில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments