Latest News

October 14, 2015

ஈழத்தமிழர் ஒருவரை நாடுகடத்த கனடா அரசு தீவிர முயற்சி
by Unknown - 0

கடந்த 1995ம் ஆண்டில் இருந்தே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்ற காரணத்தை கூறி ஈழத்தமிழர் ஒருவரை கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகிறது.

மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரையே கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகின்றது.

இந்த நிலையில், இதுகுறித்து குடியுரிமை மற்றும் அகதிகளுக்கான ஆணையம் கருத்து கூற மறுத்துள்ளது.

ஆனால் கடந்த 5-ம் திகதி சுரேஷ் அளித்துள்ள மனுவில், குடியுரிமை மற்றும் அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நாட்டில் அனுமதிக்க முடியாத நபராகவே சுரேஷ் கருதப்படுகிறார்.

கடந்த 1995-ம் ஆண்டு கைது செய்த போதே அப்போதைய லிபரல் அரசால் இந்த வழக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும் தீவிரவாத அமைப்புகளுக்காக நிதி திரட்டுவதும் ஒரே குற்றச்செயலே என நீதிமன்றம் அப்போது தெரிவிந்தது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு நாடு கடத்தும் திட்டம் தலைகீழானது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அன்னா பாப்,

சுரேஷை நாடு கடத்துவது குறித்து உறுதியான தகவல்களை அளிக்க மறுத்தார். போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு கனடா நாட்டின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் உலகத்தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டது.

மேலும் தமிழ் புலிகளின் அறிவுறுத்தல் படியே உலகத்தமிழர் இயக்கம் கனடாவில் நிதி திரட்டியதாகவும் பொதுமக்களுக்கான வலைத்தளங்களின் பதிவிடப்பட்டன.

மேலும் உலகத்தமிழர் இயக்கம் கனடா வாழ் தமிழர்களிடம் அச்சுறுத்தியும் மிரட்டியும் நிதி திரட்டியதாகவும் அந்த வலைத்தளங்களில் கனடா அரசு குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments