Latest News

October 01, 2015

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது ஶ்ரீலங்கா ஆதரவு அமெரிக்க பிரேரணை
by admin - 0

இலங்கைத் தொடர்பில் அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்று தலைப்பில் அமெரிக்கா பிரேரணை ஒன்றை முன்வைத்தது.

முன்னதாக 26 பந்தியாக முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை பின்னர் சில மாற்றங்களுடன் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட பிரேரணையாக கடந்த வியாழக்கிழமை மீண்டும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் பிரேரணைக் குறித்து பல நாடுகள் தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்ததுடன், அநேகமான நாடுகள் அந்த பிரேரணைக்கு ஆதரவான போக்கினைக் கடைப்பிடித்திருந்தது.

இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு எந்தவொரு நாடும் எதிர்ப்பினை வெளியிடாத நிலையில், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments