Latest News

September 29, 2015

குமுறும் சிலி நாட்டு கல்­புகோ எரி­மலை!
by Unknown - 0

தென் சிலி­யி­லுள்ள கல்­புகோ எரி­மலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து குமுறி வரு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி பிராந்­தி­யத்­துக்கு இந்த மாதம் துணி­கர பய­ணத்தை மேற்­கொண்ட தீய­ணைப்புப் படை­வீ­ரரும் புகைப்­படக்கலை­ஞ­ரு­மான எட்­வார்டோ மின்ட் (28 வயது) அந்த எரி­மலை குமு­றலை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களை எடுத்து வெளி­யிட்­டுள்ளார்.

மேற்­படி புகைப்­ப­டங்கள் சர்­வ­தேச ஊட­கங்­களில் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அவர் புருட்­டிலர் நகருக்கும் லல­ன­ட­கு­யிஹு நக­ருக்­கு­மி­டை­யி­லுள்ள ஏரியில் படகுப் பய­ணத்தை மேற்­கொண்டு இந்த அரிய புகைப்­ப­டங்­களை எடுத்­துள்ளார்.

40 வருட கால­மாக உறங்கு நிலை­யி­லி­ருந்த கல்­புகோ எரி­மலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட­வை­யாக குமு­றி­யது. அதற்கு 5 மாதங்கள் கழித்து தற்போது இந்த எரி­மலை சிலியின் உயிர்ப்பான 90 எரிமலைகளில் மிக வும் அபாயகரமான 3 எரிமலை களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
« PREV
NEXT »

No comments