Latest News

September 24, 2015

ஐ.நாவின் வெளியான அமெரிக்க திட்ட வரைவு...! எதிர்பார்ப்பில் ஏமாற்றமா.....?
by Unknown - 0

லங்கை தொடர்பிலான அமெரிக்க பிரேரணை ஜெனிவா நேரம் இன்று மாலை 5;30 மணிக்கு வெளியாகியுள்ளது.
இத் திட்ட வரைவில் எதிர்பார்த்ததை விட சில சரத்துக்கள் வித்தியாசமான முறையில் மாற்றி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கலப்பு நீதி மன்றம் எனக் குறீப்பிடப்பட்டிருந்த சொற்பதம் விஷேட சபை என மாற்றப்பட்டதுடன் அதனை விசாரிக்கும் நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ் வரைவு எதிர்வரும் 30ம் திகதி சபையின் விவாதிக்கப்படும்போது மேலும் ஒரு சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் போதிலும் , இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டே நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் கலப்பு நீதி மன்றம் என்னும் சொற்பதம் நீக்கப்பட்டமையானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments