Latest News

September 22, 2015

விசாரணை அறிக்கை இனச் சுத்திகரிப்பு விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை – ஐ.நா
by Unknown - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கை, இனச் சுத்திகரிப்பு தொடர்பிலான விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னின் பேச்சாளர் ரவீனா சஹாம்தாசனி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்ப்பட்டமையை மறைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணை அறிக்கை அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் இந்திய ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு, அவரது பேச்சாளர் சஹாம்தாசனி மின்னஞ்சல் வழியாக பதிலளித்துள்ளார்.

இந்த விசாரணை அறிக்கையின் ஊடாக இனச் சுத்திகரிப்பு இடம்பெறவில்லை என உறுதிப்படக் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலப்பு நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் விரிவான குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனச் சுத்திகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு குறிக்கோள் மற்றும் தனிப்பட்ட முறையிலான காரணிகள் அவசியப்படுதாகத் தெரிவித்துள்ளார்.விசாரணைகளின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த இரண்டு ஏதுக்களும் பூர்த்தி  செய்யப்பட்டுள்ளதாக நாம் முழு அளவில் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரப்பட்ட சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 3000 எழுத்து மூல சாட்சியங்கள் 11 நாடுகளின் நேரடியாக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள், வீடியோ, புகைப்படம் மற்றும் செய்மதி தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments