Latest News

September 19, 2015

அறிக்கையின் காரம் குறைவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்
by admin - 0

news
ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் காரம் குறை­வ­தற்கு எமது அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே கார­ண­மாகும். நான் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்று அர­சாங்கம் மாறி­யி­ருக்­கா­விட்டால் பார­தூ­ர­மான அறிக்கை வெளி­வந்­தி­ருக்கும். நாம் கடந்த 8 மாத கால­மாக மேற்­கொண்ட வேலைத்­திட்­டங்­க­ளி­னா­லேயே இத்­த­கைய அறிக்கை வெளி­வந்­துள்­ளது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நாம் செல்­ல­வேண்­டிய பயணம் நீண்­ட­தூ­ர­மாக உள்­ளது. 

இதற்கு மஹிந்த இல்­லாத அர­சாங்கம் தான் வேண்டும். மஹிந்­தவின் அர­சாங்கம் இன்று ஆட்­சி­யி­லி­ருந்­தி­ருந் தால் பார­தூ­ர­மான நிலை நாட்­டுக்கு ஏற்­பட்­டி­ருக்கும். நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் மாற்­றத்­தி­னா­லேயே ஐ.நா. அறி க்கை காரம் குறைந்து வெளி­வந்­துள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள் மற்றும் தேசிய பத்­தி­ரி­கைகளின் ஆசி­ரி­யர்கள் ஆகியோரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன நேற்று பிற்­பகல் சந்­தித்து கலந்­து­ரை­யாடினார். இந்த சந்­திப்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ, ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜன­வரி மாதம் 08 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட அர­சியல் மாற்றம் கார­ண­மாக வெளிப்­ப­டை­யான வெளி­நாட்­டுக்­கொள்­கை­யினை நாம் பின்­பற்­றினோம். சக­ல­ரது ஆத­ர­வையும் பெற்று செயற்­பா­டு­களை மேற்­கொண்டோம். சர்­வ­தேச ரீதியில் அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். அமெ­ரிக்க இரா­ஜாங்க அமைச்சர் உட்­பட சர்­வதே நாடு­களின் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம்.

நாட்டில் ஜன­நா­ய­கத்தை மேலோங்கச் செய்­யவும் மனித உரி­மை­களை பாது­காக்கச் செய்­யவும், நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். சர்­வ­தேச ரீதி­யிலும் எமது செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு கிடைத்­தன. 19 ஆவது திருத்த சட்­டத்தை அமுல்­ப­டுத்தி நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையின் அதி­கா­ரங்­களை குறைத்தோம். பாரா­ளு­மன்­றத்தில் சக­ல­ரது ஒத்­து­ழைப்­பையும் பெற்று மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் இதனை நிறை­வேற்­றினோம்.

தற்­போது ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. இந்த அறிக்கை காரம் குறைந்­த­நி­லயில் வந்­துள்­ளது. இதற்கு எமது அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே கார­ண­மாகும். உள்­ளக விசா­ர­ணை­க­ளுக்கு மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவே வித்­திட்டார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஐ.நா. செய­லாளர் நாய­கத்­துடன் செய்து கொண்ட இரு தரப்பு உடன்­ப­டிக்­கையின் மூலம் உள்­ளக விசா­ர­ணைக்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது. அதன் பின்னர் அர­சாங்­கமே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் யோச­னை­யையும் நிறை­வேற்­றி­யது.

ஐ.நா. மனித உரி­மையின் அறிக்கை இவ்­வாறு வெளி­யா­ன­மைக்கு அர­சாங்கம் மாறி­யதும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­யுமே கார­ண­மாகும். நாம் ஆட்­சி­ய­மைத்­ததும் மனித உரி­மை­யினை நிலை­நாட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்போம். தேசிய ஒற்­று­மைக்கு வழி­வ­குக்கும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டோம். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க தலை­மையில் தேசிய நல்­லி­ணக்க குழு­வினை அமைத்தோம். தேசிய சமா­தான செயற்­பா­டுகள் தொடர்­பிலும், நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களே ஐ.நா. அறிக்கை இவ்­வாறு வெளி­யா­கி­யுள்­ள­மைக்கு கார­ண­மாகும்.

ஜன­வரி மாதம் 8ஆம் திகதி இடம் பெற்ற தேர்­தலில் நான் வெற்­றி­பெற்­றி­ருக்­கா­விட்டால், அல்­லது அர­சாங்கம் மாறி­யி­ருக்­கா­விட்டால் பார­தூ­ர­மான அறிக்கை வெளி­வந்­தி­ருக்கும். எமது அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளி­னா­லேயே காரம் குறைந்த அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. ஆனால் இந்த செயற்­பா­டுகள் ஊட­கங்­களில் செய்­தி­யாக வெளி­யா­க­வில்லை. நாம் செல்ல வேண்­டிய தூரம் நீண்­ட­தாக உள்­ளது. மஹிந்­தவின் அர­சாங்கம் இருந்­தி­ருந்தால் பார­தூ­ர­மான நிலை நாட்­டுக்கு ஏற்­பட்­டி­ருக்கும்.

இன­வாத சக்­திகள் இன்­னமும் செயற்­பட்டு வரு­கின்­றன. இத்­த­கை­ய­வர்­க­ளது செயற்­பாட்டை முறி­ய­டிக்­க­வேண்டும். இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் அர­சாங்­கத்தின் செயற்­றிட்­டங்கள் குறித்தும் அர­சாங்க மற்றும் தனியார் ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்த வேண்டும். புதிய அர­சாங்­கத்தின் கொள்­கையும், செயற்­பா­டுமே ஐ.நா.வின் அறிக்கை பார­தூ­ர­மாக அமை­யா­மைக்கு காரணம் என்­பதை புரிந்து கொள்­ள­வேண்டும்

நாம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கோ, அல்­லது உள்ள விசா­ர­ணைக்கோ முகம் கொடுத்தே ஆக­வே­ணடும். இது குறித்த தீர்­மானம் ஒன்­றுக்கு நாம் வர­வேண்டும். இவற்றை நிரா­க­ரித்­து­விட்டு ஐ.நா.வுக்கு நாம் முகம் கொடுக்க முடி­யுமா? இதனால் தான் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு நாம் உடன்­பட்­டுள்ளோம் என்றார்.

பிர­தமர் கருத்து
இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ரணை என்றோ, இலங்­கையில் யுத்­தக்­குற்றம் இடம் பெற்­ற­தா­கவோ, ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. எவ­ரது பெயர்­களும் குறிப்­பி­டப்­ப­டவும் இல்லை. விசேட கலப்பு நீதி­மன்றம் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. பர­ண­கம அறிக்கை, மற்றும் உட­ல­கம அறிக்கை, என்­ப­வற்றை ஆராய்ந்து இவ்­வி­டயம் குறித்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இங்கு கருத்துத் தெரி­வித்தார்.
ஐ.நா. அறிக்கை தொடர்பில் ஊட­கங்­களின் நிலைப்­பாடு என்ன என்­பதே எனது பிரச்­சி­னை­யாக உள்­ளது.
ஐ.நா. அறிக்­கையில் யுத்தக் குற்றம் இடம் பெற்­ற­தாக கூறப்­ப­ட­வில்லை. நாம் நாட்டை மீட்­டெ­டுத்­துள்ளோம். நாட்டின் நீதித்­துறை இந்த நிலைக்கு செல்­வ­தற்கு யார் காரணம் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. தற்­போ­தைய நிலையில் அமெ­ரிக்கா, பிரே­ர­ணை­யொன்றை ஐ.நா. மனித உரிமை பேர­வையில் கொண்­டு­வ­ர­வுள்­ளது. அந்தப் பிரே­ர­ணையைப் பின்­பற்றி நாம் முன்­செல்­ல­வேண்டும். நாம் இரா­ணு­வத்­தி­னரை காப்­பாற்­றி­யுள்ளோம். அறிக்­கையில் எவ­ரது பெயர்­களும் இடம் பெற­வில்லை.

இலங்­கையும் ஐ.நா. வும் ஒன்­றாக இணைந்து வேலை செய்யும் போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்­ற­வர்கள் எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர். நாம் ஒன்­றி­ணைந்து வேலைத்­திட்­டத்தை செய்­ய­வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்­தத்தின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார். அவரை நானும் சம்பந்தனும் சந்திப்பதற்கு விரும்பியிருந்தோம். ஆனால் அதற்கு அன்றைய அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதனால் பான் கீ மூனை அவர் புறப்படும் போது விமான நிலையத்தின் விருந்தினர் அறையில் சந்தித்துப் பேசியிருந்தேன். இதன் போதே உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை நான் அறிந்தேன். இதேபோல் அமெரிக்காவில் ஐ.நா. விசாரணையாளர் தர்ஸ்மனை சந்தித்த அரசாங்கப் பிரதிநிதிகளான மொஹான் பீரிஸ், பாலித கொகன ஆகியோர் உள்நாட்டில் குற்றவியல் சட்டங்களுக்கு இணங்க விசாரணைகள் இடம் பெறும் என்று உறுதிவழங்கியிருந்தனர்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஹுமாவும் எமக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்.

சகல கட்சி பிரதிநிதிகளை அவர் சந்திக்க விரும்பியபோதிலும் அதற்கும் அன்றைய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அந்த விடயமும் முன்னோக்கிச் செல்லவில்லை என்று கூறினார்.
« PREV
NEXT »

No comments